ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சுமங்கலி பூஜையுடன் 108 நாட்கள் 108 கலச திருமஞ்சன திருவிழா துவங்கியது
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,
சுபகிருது வருடம் மாசி 19ம் நாள் மார்ச் 3.3.2023 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், வருண பகவானின் கருணை வேண்டியும், உலக மக்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும், திருமணத் தடை, தொழில் தடை, காரியத் தடை, உத்தியோகத்தடை போன்ற பல்வேறு தடைகள் நீங்கவும் திருஷ்டி தோஷங்கள், நாட்பட்ட வியாதிகள், விலகி நல் ஆரோக்கியம் பெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், மாணவ மாணவிகள் நல் ஆரோக்கியத்துடன் ஆண்டு தேர்வினை எழுதவும் மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசங்கள் கொண்டு 108 நாட்கள் காலை 10.30 மணி முதல் 11.40 மணிவரை தொடர் திருமஞ்சன திருவிழா 03.03.2023 வெள்ளிக்கிழமை 108 சுமங்கலி பூஜையுடன் தொடங்கியது. மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மூலிகை திரவியங்கள் கொண்டு சிறப்பு ஹோமங்களும் விஷேச திரவிய அபிஷேகத்துடன் 108 கலச தீர்த்தம் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 108 சுமங்கலி பூஜையும் விஷேச அர்ச்சனையும் நடைபெற்றது. இவ்வைபவத்தில் ஏராளமான உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுரை வழங்கினார்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment