மாசிமகம் - பௌர்ணமி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் விஷேச ஹோம பூஜைகள் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 06.03.2023 திங்கள்கிழமை மாசிமகம் - ஸ்ரீ ஐஸ்வர்ய பித்யங்கிரா தேவியின் பிரதிஷ்டா தின வைபவம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் விஷேச மூலிகைகளைக் கொண்டு சிறப்பு ஹோமமும் ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவி, ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பௌர்ணமியை முன்னிட்டு 7.3.23 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகமும் அன்ன தோஷங்கள் விலக ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஐந்தாவது நாளாக 108 நாட்கள் 108 கலச திருமஞ்சன திருவிழா சுமங்கலி பூஜையுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், சுமங்கலி பெண்கள், கலந்து கொண்டு திருவருளுடன் குருவருளையும் பெற்று சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment