Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, March 8, 2023

108 நாட்கள் 108 கலசம் 108 சுமங்கலி பூஜையுடன் லக்ஷ குங்குமார்ச்சனை திருமஞ்சன திருவிழா

   108 நாட்கள் 108 கலசம் 

                 108 சுமங்கலி பூஜையுடன் 

                  லக்ஷ குங்குமார்ச்சனை

திருமஞ்சன திருவிழா

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

03.03.2023 வெள்ளிக்கிழமை மாசி 19 முதல் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை ஆனி 3 வரை  

108 நாட்கள் தொடர் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

 

மருத்துவ கடவுள் ஸ்ரீ தன்வந்திரி பகவான்

 

உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம்அவை மச்சகூர்மவராகநரசிம்மவாமனபரசுராமராமபலராமகிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும்தவிரதத்தாத்ரேயர்வியாசர்கபிலர்தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார்தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம்ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

 

திருப்பாற்கடலில் தேவர்களும்அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும்பல தெய்வங்களும் வெளிவந்தனஅப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்ததுஅந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரிகற்பனைக்கு எட்டாத அழகுடன்திருக்கரங்களில் சங்குசக்கரம்அட்டைப்பூச்சிஅமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

 

அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர்நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம்பணம்சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும்நிம்மதியான மனம் வேண்டும்அல்லவாஇப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார்இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும்மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதிமருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.

 

மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும்இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லதுஇவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்ஸ்ரீரங்கநாதருக்கு வைத்தியம் பார்த்தவர் ஸ்ரீதன்வந்திரி பகவான்அவரே ஸ்ரீமன் நாராயணன்அப்படிப்பட்ட தன்வந்திரி பகவானுக்கு 89 பரிவார தெய்வங்களுடன் தனித்திருக்கோவில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அனந்தலையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்ற பெயரில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதத்தில் 1995 ஆம் ஆண்டு அமைத்துள்ளார்இப்பீடத்தில் இங்கு சைவம்வைணவம்ஸ்ரீ சாக்தம்சௌரம்கௌமாரம் மற்றும் காணபத்யம் என 6 மதங்களுக்குறிய தெய்வங்களை கொண்டு 89 பரிவார சந்நதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைத்து  அவற்றுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகசிறப்பாகும். மேலும் யாகமே யோகம் – ஹோமமே ஷேமம் என்ற வார்த்தைக்கிணங்க தினசரி பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெறும் யக்ஞ பூமியாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

 

இங்கு வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாககையில் அட்டைப் பூச்சிஅமிர்த கலசம்கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார்இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்இங்கு மற்ற ஆலயங்கள் போன்று தேங்காய் உடைத்தல், சிகை நீக்குதல் உண்டியல் காணிக்கை செலுத்துதல், வாகன பூஜைகள், அங்கப்பிரதக்ஷ்னம் போன்ற வழிபாடுகள் இன்றி அனைத்திற்கும் யாகம் ஒன்றே தீர்வு என்ற வகையில் 365 நாட்களும் வருகைபுரியும் பக்தர்கள் தங்கள் திருக்கரங்களாலே யாகங்கள் செய்து மன நிறைவுடன் செல்கின்றனர், என்பதை காணும் பொழுதில் நமக்கும் மன நிறைவு ஏற்படுகிறது என்பதே நிதர்சனம்.   

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற மாசி 19ம் நாள் 03.03.2023 வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினம் முதல் வருகிற சோபகிருது வருடம் ஆனி 3ம் நாள் ஜுன் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினம் வரை  தினமும் மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசங்கள் கொண்டு 108 நாட்கள் காலை 10.30 மணி முதல் 11.40 மணிவரை தொடர் திருமஞ்சன திருவிழாவும் மாலை மணி முதல் மணி வரை லக்ஷ குங்குமார்ச்சனை சுமங்கலி பூஜை வைபவமும்  நடைபெறவுள்ளது.

 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு:

 

மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோமீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள்மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67க்கும் மேற்பட்ட திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம்  147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகிதஜப மஹா மந்திரங்களை பெற்று அவற்றை   கர்ப்பகிரஹத்தின் கீழ் மந்திரமே யந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவான் பிரதிஷ்டையாகி உள்ளார். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார்என்பது இந்த ஷேத்திரத்தின் சிறப்பாகும்.

 

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் திருமஞ்சனத் திருவிழாவிலும் ஆராதனைகளிலும் பங்கேற்று  உடலின் எதிர்ப்புத் திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படவும்தீராத நோய்கள் தீரவும்கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும்சகல ஐஸ்வர்யங்களும் பெறவும் மற்றும் ல்வேறு  நன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

ஸ்ரீ தன்வந்திரி மஹா பிரசாதம்:

 

சுக்கு-வெல்லம், அபிஷேகத் தேன், அபிஷேகத் தைலம், அபிஷேக நெய், குங்குமம், ஹோம பஸ்பம், ஹோம ரக்ஷ்சை, மந்திர ரக்ஷ்சை, மூலிகை ரக்ஷ்சை, ஜப தீர்த்தம், ஔஷத பிரசாதம், முக்குடி கஷாயம், மற்றும் தன்வந்திரி லேகியம் விஷேச காலங்களில் வழங்கப்படுகிறது.

 

 

விஷேச பூஜைகள்

·         நோய்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும் சகல தேவதைகளின் அருள் பெறவும், கண் திருஷ்டி விலகவும் தினமும் காலை முதல் மாலை வரை மஹா தன்வந்திரி ஹோமமும் திருஷ்டி ஹோமமும் நடைபெறுகிறது.

·         பிரதி ஏகாதசி திதி, சுவாதி, திருவோணம், புனர்பூசம்  நட்சத்திர நாளில் காலையில் மூலவர் தன்வந்திரிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

·         ஆண்-பெண் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், இராகு-கேது தோஷம் விலக பிரதி பௌர்ணமி தோறும் காலையில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது.

·         சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் அகலவும் சாபங்கள் நீங்கவும் பிரதி அமாவாசை தோறும் நண்பகல் மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி பிரத்யங்கிரா யாகம் நடைபெறுகிறது.

·         தொழில்-வியாபாரம் சிறக்கவும், பயங்கள் அகலவும், பிரதி அஷ்டமியில் அஷ்ட கால மஹா பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் மாலையில் நடைபெறுகிறது.

·         பிரதி பஞ்சமியில் வாழ்க்கை வளம் பெறவும் பல்வேறு வகையான தடைகள் விலகவும் செல்வம் செழிக்கவும் பஞ்சமுக வராகி யாகம் மாலையில் நடைபெறுகிறது.

 

குறிப்பு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து யாகங்களின் பூஜை நேரங்கள் விஷேச காலங்களில் மாறுதலுக்குட்பட்டது.

 

அமைவிடம்

 

1.   பேருந்து மார்க்கம்:

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

2.   இரயில் மார்க்கம்:

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் வாலாஜா ரோடு இரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

 

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

இராணிப்பேட்டை மாவட்டம்செல் – 94433 30203

Web: www.danvantritemple.org / Email: danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment