வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்வாஸ்து
ஹோமமும் ஏகாதசி நெல்லிப்பொடி திருமஞ்சனமும்.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளாசிகளுடன் வருகிற 05.03.2020 வியாழக்கிழமை
ஏகாதசி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணி
முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி
சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனமும், ஸ்ரீ வாஸ்து பகவாணுக்கு வாஸ்து சாந்தி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்
நடைபெற உள்ளது.
வாஸ்து
சாந்தி ஹோமம் :
இன்றைய
காலத்தில் நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது. அளவற்ற ஆசையினாலும், நாமும் வீடு
கட்டி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சிலர் அதை பெற்று வீடு
எழுப்புகிறார்கள். சிலர் அதை சில காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும்
அரைகுறையாக விட்டு விடுகின்றனர். பல லக்ஷங்கள் செலவு செய்து பெரிய பெரிய
கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும்,
தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின்
குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி எண்ணற்ற
பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம்
என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க மாட்டார்கள்.
கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், வீண் விரயங்களும் தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன எனலாம்.
வாஸ்து
பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள்
மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர்
விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில்
வாஸ்து பகவானை பூஜை செய்து மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி
நன்மை கிடைக்கும்.
ஏகாதசி
ஹோமம், நெல்லிப்பொடி திருமஞ்சனம் :
காசியை
மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான
மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின்
அருள்வாக்கு. அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள்
ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றார்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை,
பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி
எனப்படுகிறது. அவை சுக்லபக்ஷ ஏகாதசி, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி
எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி நாளிலும் விரதமிருந்து வழிபடுவோர்
பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு
மாதமும் வரும் ஏகாதசி திதியில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி
ஹோமத்துடன் சிறப்பு மருத்துவ குணம் கொண்ட நெல்லி பொடி திருமஞ்சனத்துடன் பலவகை
மூலிகை தீர்த்தங்களை கொண்டு அபிஷேக, அலங்கார
பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பூஜையின்போது ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனமுருக
பிரார்த்தனை செய்து அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை
உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இத்தகைய
சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன்
குருவருள் பெற்ற ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன்
அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment