வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சிவநாகம், திரிசூலம் மற்றும் சப்தகன்னியர் பிரதிஷ்டை நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ
தனவந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘’யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு’’ டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று
26.02.2020
புதன்கிழமை காலை 8.00 மணி முதல்
11.00 மணி வரை சக்தி ஹோமம், சப்தகன்னியர் ஹோமத்துடன் சிவநாகம்,
திரிசூலம் மற்றும் சப்தகன்னியர் பிரதிஷ்டாபன வைபவம் நடைபெற்றது.
இதில் மங்கள் இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம்,
யாகசாலை பூஜை, கலசாவாஹனம், பாராயணங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஹோமங்களில்
திரிமதுரம், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், வஸ்திரங்கள்
சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கலசப்புறப்பாடும் மஹா
அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.
இதில் திமிரி,
பரதராமி
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலய ஸ்தாபகர் அவர்கள் மற்றும் சுற்றுபுர நகர கிராம
மக்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை
பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment