வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மங்கள
மஹா சண்டியாகம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்
08.03.2020
ஞாயிற்றுக்கிழமை
காலை 09.00
மணி
முதல் மதியம் 03.00 மணி வரை மங்கள மஹா சண்டி யாகமும்
ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த சண்டி யாகமானது சென்ற 06.03.2020 வெள்ளிக்கிழமை
முதல் நடைபெற்று வந்தது.
இதில் மங்கள இசை, கோ பூஜை,
விநாயகர் பூஜை, நாங்காம் கால யாக பூஜை,
பாராயணங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நெய்,
தேன், மூலிகைகள், பூசணிக்காய்,
புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள்,
குங்குமம், சௌபாக்ய பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், பலகாரங்கள், இனிப்பு வகைகள் மேலும் பல்வேறு திரவியங்கள் சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி
நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால்,
தயிர், சந்தனம், மஞ்சள்,
திரவியப்பொடி, பன்னீர் போன்ற பல்வேறு திரவியங்களால்
மஹா அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரு. நந்த்கோபால்
I.A.S. அவர்கள், திருமதி. நர்மதா I.A.S. அவர்கள் குடும்பத்தினர்கள், மாநில தகவல் ஆணையர் திரு. பிரதாப் குமார் அவர்கள்,
முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள்
மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிபெண்கள்
பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம்,
ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்,
ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம்
என்ற ஆறு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான
மாணவ மாணவிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற மாணவ
மாணவிகளுக்கு ஹோமத்தில் வைத்து பூஜிக்கபட்ட எழுது பொருட்களை பிரசாதமாக வழங்கினார்.
இவ்வைபவங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment