வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில்கொரோனா வைரஸ் நோயின்
அச்சத்திலிருந்து
மீண்டு வரசிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் நோய்த் தீர்க்கும் மருத்துவ மனையாக
செயல்பட்டு வரும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் கொரோனா வைரஸ் நோயின்
அச்சத்திலிருந்து
மீண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில்
குணமடைந்து முழு ஆரோக்கியம் பெற வேண்டியும் சகலவிதமான க்ஷேமங்களை பெற வேண்டியும்
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சென்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை
திருவோண நக்ஷத்திரம் முதல் ஸ்ரீ தன்வந்திரி மஹாயாகத்துடன் மஹா ருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம்,
நவக்கிரக ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் சிறந்த முறையில்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று
31.03.2020
செவ்வாய்கிழமை
திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஆரோக்ய பீட அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க
மஹா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.
இதில் உரிக்கொடி,
கருடக்கிழங்கு, ஆடாதோடை, விஷ்ணுகிராந்தி, துளசி, பற்படாகம், கோரைக்கிழங்கு,
வெண்கடுகு, நாயுருவி, சீந்தல்கொடி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்கள்
யாகத்தில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி
பெருமாளுக்கு பஞ்ச திரவிய திருமஞ்சனமும், ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு பால் மற்றும்
தேன் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கலந்துகொண்டு உலக மக்கள்
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டு, விரைவில்
முழு ஆரோக்கியமும் நலமும் பெற பிரார்த்தனை செய்தார். இப்பூஜையின்
பொழுது ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 02.04.2020 முதல்
05.04.2020
வரை
நடைபெற உள்ள வருடாந்தர பூஜைகளும், ஹோமங்களும், ஆராதனைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
என்பதாக தெரிவித்தார். இந்த யாக பூஜைகளில் பொதுமக்கள் யாரும்
கலந்துகொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment