கொரோனா
வைரஸ் நோய் வராமல் தடுக்க
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சிறப்பு
ஹோம பூஜைகள் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்
உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும்
தாக்கத்தின் அச்சம் குறையவும் மற்றும் பாதிக்கபட்ட நபர்கள் விரைவில் குணமடையவும் இன்று
12.03.2020
வியாழக்கிழமை
காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.
இதில் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள்,
பழங்கள், வஸ்திரங்கள், நிவேதனப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி
நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற
கொரோனா வைரஸ் நோயின் அச்சம் குறையவும், பாதிப்புகள் குறையவும்,
பயம் விலகவும் விழிப்புணர்வு ஏற்படவும் கூட்டு பிராத்தனைகள்
செய்தனர். மேலும் பங்கேற்றவர்களுக்கு
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment