ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஆண் பெண் திருமணத்தடை நீக்கும் யாங்களுடன்தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற யாகம்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்களின் நலன் கருதி
பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 07.04.2020 செவ்வாய்கிழமை
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ
ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி
யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் நடைபெற உள்ளது.
கந்தர்வ
ராஜ ஹோமம் :
திருமணத்தடைகள்
உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக
ரீதியாக உள்ள தோஷங்களும்,
நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம்
நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
சுயம்வர
கலாபார்வதி யாகம் :
திருமணத்தடைகள்
உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி
யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம்
நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா
பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி திருமணம் செய்து
மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும்
அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
சந்தான
கோபால யாகம் :
குழந்தை
பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம்
செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான
தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள்
மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
இந்த
ஹோமங்களில் பங்கேற்ககும் நபர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை
வழங்கி இறை பிரசாதங்கள் வழங்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment