வீடு கட்டுவதற்கும்,
மனைகள் விற்பதற்கும்,
வளமான வாழ்விற்கும்
வாஸ்து
பகவான் கோயிலில்
வளம்
தரும் வாஸ்து ஹோமம்.
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு
வருகிற பக்தர்கள் இங்கு நடைபெற்று வரும் ஹோமங்களில் கலந்து கொண்ட பின் உரிய பலனையும்
ஆசியையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருவதற்குக் காரணம் இந்த பீடத்தின் மேல்
அவர்கள் கொண்டிருக்கும், அபரிமிதமான நம்பிக்கையும் ஒப்பற்ற பக்தியும்தான் எனலாம் என்கிறார்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தினம்தோறும் புதிது
புதிதாகப் பல பக்தர்கள், பிரபலங்கள் இந்த பீடத்துக்கு வந்து செல்கிறார்கள். குடும்ப
க்ஷேமம், ஆரோக்யம், ஐஸ்வர்யம், வேண்டி பலரும் வருகிறார்கள். இந்த பீடத்துக்குள் முதன்
முதலாகக் காலடி எடுத்து வைக்கிற எந்த ஒரு பக்தரும் இங்கு நடந்து வருகிற பூஜை முறைகளைப்
பார்த்தும், ஹோமங்களைப் பார்த்தும் ‘இதுபோல் வேறு எங்கும் நடைபெறுவதே இல்லை’
என்று பரவசத்துடன் விழி உயர்த்திச்
சொல்லி விட்டுப் போகிறார்கள். காரணம், இங்கு நடைபெறும் அனைத்து ஹோமங்களும் அந்த அளவுக்கு
சிரத்தையுடனும் ஆத்மார்த்தத்துடனும் செய்யப்படுகின்றன.
இந்தியாவில்
முதல் வாஸ்து பகவான் கோயில்
வேலூர் மாவட்டம்,
வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும்,
வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று
ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
வாஸ்து பகவான்
அமைப்பு வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன்
தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும்,
திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்
திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மனைகள் விற்பதற்கும், வளமான வாழ்விற்கும்
:
இன்றைய காலத்தில் நிறைய மனைகள் விற்பனைக்கு
வருகிறது அளவற்ற ஆசையினாலும் நாமும் வீடு கட்டி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்தில் சிலர் அதை பெற்று வீடு
எழுப்புகிறார்கள் சிலர் அதை சில காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக
விட்டு விடுகின்றனர். மனையை வாங்கும்
பொழுது நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும், பணத்தையும் இழந்து நிம்மதி இல்லாமல் நாம்
சிரமப்பட கூடாது என்கிறார் ஸ்வாமிகள்.
பல லட்சங்கள் செலவு
செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி
குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி
எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம்
என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய
பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், வீண் விரயங்களும் தேவையற்ற பொருளாதாரச்
செலவுகள் ஏற்படுகின்றன எனலாம்.
வாஸ்து விழிக்கும் நாள் :
மக்கள் வாஸ்து
விழிக்கும் நாளில் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் வாஸ்து ஹோமங்களிலும் பூஜைகளிலும்
கலந்துகொண்டு வாஸ்து பகவானை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள்
குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின்
வேலையாகும் மேலும் முறையான வாஸ்து அமைந்த கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மன
நிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல்
இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற
சகல நன்மைகள் பெருகும்.
ஸ்ரீ வாஸ்து தோஷ நிவர்த்தி
ஹோமம்
வாஸ்து பகவானுக்கு சிறப்பு
அபிஷேகம்:
ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக நலன் கருதி,
மக்கள் பயன்பெற வருகிற மாசி 22,
06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00
மணி முதல் 11.30 மணிக்குள்ளாக வாஸ்து பகவான்
கண்விழிக்கும் நாள் என்பதால் ஸ்ரீ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம் மற்றும் வாஸ்து பகவானுக்கு
சிறப்பு அபிஷேகம் வாஸ்து தோஷம் நீங்கி வளமான வாழ்வு வாழ மேற்கண்ட ஹோமம் நடைபெறுகிறது.
வாஸ்து பகவான் ஹோம பிரசாதம் :
வாஸ்து ஹோமத்திலும்
வாஸ்து பகவானிடமும் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம்,
வாஸ்து தேங்காய், வில்வ காய், மூலிகை சாம்பிராணி போன்றவைகள் பிரசாதமாக புதிய வீடுகள்,
அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம், அவற்றை பெற்று பூஜித்து வளமுடன் வாழலாம்.
தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர
ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை
- 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,
E-Mail: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment