ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.
14-ஆம்
ஆண்டு ஸம்வத்ஸர விழா.
நாளை முதல் ஆரம்பம்.
எம்பெருமாள்,
ஸ்ரீய:பதியாய் அவாப்தஸமஸ்தகாமனாய், அனந்த கல்யாண குணநிதியாய்
பல திவ்ய தேசங்களிலும் மற்றும் பல க்ஷேத்திரங்களிலும் விஷ்ணுவின் பல திருநாமங்களில்
எழுந்தருளி உள்ள நிலைகளில் ஸத்ய வ்ரத க்ஷேத்ர ஸமீபத்தில் கோயில் கொண்டு மஹாவிஷ்ணு அம்சமாக
எழுந்தருளி பக்தர்களின் அபிமான க்ஷேத்திரமாகவும், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், ஆகிய ஷண்மதங்களை
கொண்டு ஆதிசங்கரர் வழியில் ஷண்மத பீடமாக திகழும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில், பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரகத்துடன்,
ஸ்ரீவத்ஸ வம்சத்தில், ஸ்ரீ.உ.வே கம்பராஜபுரம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமிகள் - ஸ்ரீமதி.கோமளவல்லி
தம்பதிகளுக்கு குமாரராக அவதரித்த கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,
மார்ச் 23 முதல் மார்ச் 26
வரை சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகமும்
14-ஆம் ஆண்டு ஸம்வத்ஸர விழாவும்
காலை மாலை இருவேளையும் கீழ்கண்ட நிகழ்ச்சி நிழல்படி நடைபெற உள்ளது.
நாளை
23.03.2018 வெள்ளிக் கிழமை காலை 5.30 மணிக்கு
மங்கள இசை, 6.00 மணிக்கு
சுப்ரபாதம், 6.15 மணிக்கு
திருப்பள்ளி எழுச்சி, 6.30
மணிக்கு கோ பூஜை, 6.45 மணி
முதல் வேத பாராயணம், தேவதா அனுக்யம், மஹா கணபதி பூஜை, 8.00 மணிக்கு 1008 கலசங்களுக்கு சிறப்பு
பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா ஆவாஹனம், 8.30 மணிக்கு மஹா சங்கல்பம், சகல தேவதா
ஜபம், 9.00 மணிக்கு
தன்வந்திரி மூலமந்திர ஜபம், 10.30
மணிக்கு ஹோமம், 12.00
மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 12.15 மணிக்கு சதுர்வேத பாராயணம், 12.30 மணிக்கு
பிரசாத வினியோகம், 1.00 மணிக்கு
அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் தவத்திரு. கலவை
சச்சிதானந்த ஸ்வாமிகள், மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி பீடம் சக்தி திரு. கோ.ப. அன்பழகன், ஆத்ரேய கோத்திரம் பைரவர் ரமணி அண்ணா அவர்கள், இராணிபேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு
சிறப்பிக்க உள்ளனர். அது சமயம் கிராம பொது மக்களும், ஆன்மிக அன்பர்களும், பக்த மஹா
ஜனங்களும், பரம பாகவதர்களும் கலந்து கொண்டு மேற்கண்ட தெய்வங்களின் அருள் பெற்று நோயற்ற
வாழ்வுடன், குறைவற்ற செல்வத்துடன் கல்வி மேன்மை, வியாபார லாபம், உத்யோக உயர்வு, தொழில்
வளர்ச்சி, மழை வளம், விவசாய வளர்ச்சி மற்றும் பதினாறு வகையான ஐஸ்வர்யங்களுடன் சுகானந்த
பெருவாழ்வு பெற்று இகபர இன்பம் அடைய எம்பெருமான் ஆலயம் நோக்கி வர வேண்டுமாய் அகங்குளிர
அனைவரையும் வருக… வருக… என்று அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment