ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.
14-ஆம்
ஆண்டு ஸம்வத்ஸர விழா.
இரண்டாவது நாள் பூஜைகளும் ஹோமங்களும்
நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், இன்று 24.03.2018 சனிக் கிழமை சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகமும் 14-ஆம்
ஆண்டு ஸம்வத்ஸர விழாவும் காலை மாலை இருவேளையும் பூஜைகள் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு
மங்கள இசை, 6.00 மணிக்கு
சுப்ரபாதம், 6.15 மணிக்கு
திருப்பள்ளி எழுச்சி, 6.30
மணிக்கு கோ பூஜை, 6.45 மணி
முதல் வேத பாராயணம், தேவதா அனுக்யம், மஹா கணபதி பூஜை, 8.00 மணிக்கு 1008 கலசங்களுக்கு சிறப்பு
பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா ஆவாஹனம், 8.30 மணிக்கு மஹா சங்கல்பம், சகல தேவதா
ஜபம், 9.00 மணிக்கு
தன்வந்திரி மூலமந்திர ஜபம், 10.30
மணிக்கு ஹோமம், 12.00
மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 12.15 மணிக்கு சதுர்வேத பாராயணம், 12.30 மணிக்கு
பிரசாத விநியோகம், 1.00 மணிக்கு
அன்னதானமும் நடைபெற்றது. இதில் தவத்திரு.
பாலமுருகன் அடிமை ஸ்வாமிகள், தவத்திரு. ஆம்பூர் ஸ்வாமிகள், தவத்திரு. டாக்டர்
அண்ணாமலை ஸ்வாமிகள், காட்பாடி ஸ்ரீவித்யா
பீடம் பாரதி முரளிதர ஸ்வாமிகள், எலவனாசூர்கோட்டை பகவதி ஸ்வாமிகள், வடபாதி சித்தர்,
ஆற்காடு தொழிலதிபர் டாக்டர் ஜெ. லக்ஷ்மணன், திரு. அற்காடு சரவணன், செங்கல்பட் வழக்கறிஞர்
திரு. வேலாயுதம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நாளை 25.03.2018
ஞாயிற்று கிழமை இரண்டாவது நாள் பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ
காமாட்சி ஸ்வாமிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment