100 நாட்களாக ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நோய் தீர்க்கும் கடவுளும், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆவதாரமான ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு இன்று 19-03-2018 முதல் 26-03-2018 வரை தன்வந்திரி பீடத்தின் 14ஆம்
ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன், சஹஸ்ர கலசாபிஷேகம் முன்னிட்டு
சென்ற 06.12.2017 புதன்கிழமை, புனர்பூசம் நட்சத்திரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆன்று தொடங்கி இன்று 19.03.2018 திங்கட்கிழமை வரை உலக நலன் கருதி 100 நாட்கள் ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. 100 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு
இன்று மேற்கண்ட தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேற்காணும் ஐந்து யாகங்களிலும் வைத்து பூஜித்த தன்வந்திரி டாலருடன் ஹோம மஹா பிரசாதம் பெற விரும்புவோர் தன்வந்திரி பீடத்தை
தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன்ர்.
No comments:
Post a Comment