Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, March 22, 2018

சித்ரா பௌர்ணமி - ஜோதிடர் மேள....


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலக ஜோதிடர்களின் நலன் கருதி
மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமம் வருகிற
29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உலக ஜோதிடர்களின் நலனுக்காகவும் ஜோதிடர் குடும்பங்களின் நலனுக்காகவும் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பெருமாளை வேண்டி மாபெரும் தன்வந்திரி ஹோமமும், மஹா சுதர்சன ஹோமமும், மஹாலக்ஷ்மி யாகமும், வாக்தேவி ஹோமமும், அஷட பைரவர் யாகமும், தட்சிணாமூர்த்தி யாகமும் சிறந்த வேதவிற்பனர்களை கொண்டு நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் ஏராளமான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், பட்டு வஸ்திரங்கள், பக்ஷணங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் சேர்க்கப்படவுள்ளன. ஜோதிடர்கள் இறைவனின் அருளைபெற்று அவ்வப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும் ஏற்படும் தோஷங்களை கண்டறிந்து ஜாதகங்களையும், நேரங்களையும்  கணித்து முறையான பலன்கூறி பரிகாரம் செய்வித்து நாடும், மக்களும் சுபிட்சமாக வாழ வழி செய்து வருகிறார்கள். இதில் பராசரர் ஜோதிட முறை, நாடி ஜோதிட முறை என பல்வேறு முறைகளும் வாஸ்து ஜோதிடம், எண் கணித ஜோதிடம், டாரட் ஜோதிடம், கைரேகை ஜோதிடம் என்று பலவகையான ஜோதிட முறைகளை கொண்டு ஜோதிடர்கள் வலம்வந்து நேரம், காலம் பார்க்காமல் பலன் சொல்லி வருகிறார்கள். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களின் ஆரோக்யத்தையும், தங்கள் குடும்ப நலனையும் கவனித்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அத்தகைய ஜோதிடர்களின் நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள 75 பரிவார மூர்த்திகளையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் பிரார்த்தனை செய்து மேற்கண்ட ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகள் சார்ந்த ஜோதிடர்கள் பங்கேற்று பலன்பெற இசைந்துள்ளார்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 230033, மொபைல்: 94433 30203,


No comments:

Post a Comment