ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மூலவர் தன்வந்திரி
- விநாயக தன்வந்திரிக்கு
நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில், ஏகாதசி திதி மற்றும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 13.03.2018 செவ்வாய்கிழமை, 14.03.2018
புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள்
காலை 10.00 மணி
முதல் 1.00 மணி
வரை விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும்
தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெற்றது.
உலக மக்களின் நலன் கருதி நடைபெற்ற இந்த வைபவங்களில்
உடல் நோய் மன நோய் நீங்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகுவதிற்கும் பிரார்த்தனை செய்தனர்.
இதில் பங்கேற்ற பக்தர்களை, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து
ஔஷத பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment