தன்வந்திரி பீடத்தில்
தீமைகள் நீங்கி நன்மைகள் தரும்
திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் உலக நலன்
கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 9அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ
ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி
ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் இன்று 16.01.2018 செவ்வாய்க்
கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு
‘திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி
துர்கா ஹோமம் நடைபெற்றது.
இதில் பூசணிக்காய்கள்
தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய்
வற்றல் பொட்டலம், மஞ்சள், குங்குமம், பழங்கள்,
மூலிகைகள், சிகப்பு வஸ்திரம், வேப்ப
எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள்,
வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ
திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த யாகம் மூலம் பில்லி, சூன்யம், செய்வினை,
பொறாமை ஜாதக ரீதியிலான தோஷங்கள்,
கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும்,
கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும்,
விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும்,
திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்பட்டது.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment