தன்வந்திரி பீடத்தில்69 வது குடியரசு
தின விழா
கொண்டாட்டம்
பாரதமாதாவிற்கு ஒரு கோயில்
தேச நலமே தேக நலம்
என்கிறார் ஸ்வாமிகள்……….
இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்த விதமான பேதமும் இல்லாமல் சமத்துவம் நிறைந்த ஒரு பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.
தேச நலமே தேக நலம் என்கிறார் ஸ்வாமிகள். ஜாதி, மத பேதம் பார்க்காமல் சகல மதத்தவர்களும் ஆரோக்யம் வேண்டி
இங்கு வந்து பிணி தீர்க்கும் கடவுளான ஸ்ரீதன்வந்திரி பகவானைத் தரிசித்துத் தங்களது பிரார்த்தனைகளை அவர் முன் வைக்கிறார்கள். அது மட்டுமல்ல. அவர்களது பிரார்த்தனைகள் பலித்து அதற்குண்டான பலனையும் பெற்று சிறப்பாக இருப்பதாக ஸ்வாமிகளிடம்
தெரிவித்து வருகிறார்கள்.
பக்தர்களின் பிரார்த்தனைகள் பலிக்கவும், அவர்களது பிணிகள் அகலவும் மட்டுமல்ல... இந்த உலகத்தில் எந்த ஒரு வேண்டுகோளை முன்வைத்து எழுகின்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறவர் இந்த ஸ்ரீதன்வந்திரி பகவான்! சரிந்து போன இந்திய தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் சீராகி, மேலும் சிறந்து விளங்குவதற்கென்று ஒரு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
எத்தகைய ஒரு பிரார்த்தனையையும் சுபமாகப் பூர்த்தி செய்து தருகிறவர். தன்வந்திரி பகவான் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சதா சர்வ காலமும்
தேக நலனுக்காகவும் தேச நலனுக்காகவும் பல்வேறு விதமான நற்செயல்களை செய்து வருகிறார்.
தேக ஆரோக்யத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பகவானை ஸ்தாபிதம் செய்தது மட்டுமல்லாமல் தேச நலனுக்காக
பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளை பெறவும் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலனும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில்
நம் நாட்டின் பூமித் தாயாக விளங்கி வருகின்ற ஸ்ரீ பாரத மாதாவை
ஆரோக்ய பீடத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் முதலில் போற்றி வழிபடும் விதத்தில் அமைத்து
வழிபாடு செய்து வருகிறார்.
சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் தேசியக்கொடி ஏற்றி நாட்டின் நலனுக்காக சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும்
செய்து வருகிறார். இன்னாட்களில் மருத்துவ சேவை, கல்வி சேவை, ஏழை எளியவற்கு உதவிகள், மாற்றுதிறானாளிகளுக்கு உதவி போன்ற பல்வேறு விதமான நலதிட்டங்களை செய்து வருகிறார்.
இந்தாண்டும் வருகிற 26.01.2018 வெள்ளிக்
கிழமை காலை ஸ்ரீ பாரதமாதாவிற்கு அபிஷேகத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சியுடன் சிறப்பு
ஹோமங்களும் நலதிட்ட உதவிகளும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது. தேசபக்தியுடன் தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!
No comments:
Post a Comment