புத்தாண்டில் தன்வந்திரி
பீடத்தில்
அஷ்ட ஐஸ்வர்யம் தரும்
ஐந்து ஹோமங்கள் – ஏராளமான
பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் மாவட்டம், வாலாஜா
பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி பௌர்ணமி மற்றும் ஆங்கில புத்தாண்டு
முன்னிட்டு 01.01.2018 திங்கள் கிழமை, காலை 10.00 மணியளவில்
கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.
- கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
- பில்லி சூனியம், எதிரிகள் விலக - மஹா சுதர்ஸன ஹோமம்.
- ஆயுள் பயம் நீங்க - ஆயுஷ்ய ஹோமம்.
- நீண்ட ஆயுள் பெற - மஹா தன்வந்திரி ஹோமம்.
- வாழவில் வளம் பெற - குபேர லட்சுமி ஹோமம்.
ஆகிய ஐஸ்வர்யம் தரும் ஐந்து
ஹோமங்களாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும்,
கலச பூஜையும், போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் ஹோமங்கள் நடைபெற்று மஹா பூர்ணாஹுதியும் சிறப்பு
அர்ச்சனையும், கூட்டு ப்ரார்த்தனையும் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் மற்றும் பக்தர்கள்
பங்கேற்று பின்பு தன்வந்திரி பகவானையும் இதர 75 பரிவார மூர்த்திகளையும் 468 சித்தர்களையும்
தரிசனம் செய்தனர். இதில் புத்தாண்டு முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்னாடக,
புதுச்சேரி, மஹாராஷ்டிர மாநில பக்தர்களும் மலேஷ்யா, சிங்கப்பூர், கனடா போன்ற மேலை நாட்டு
பக்தர்களும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற தன்வந்திரி பகவானை பிரார்த்தனை செய்து
ஸ்வாமிகளிடம் ஆசிபெற்று சென்றனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழுவறை
வசதி, வாக்னம் நிறுத்தும் வசதி, போக்கு வரத்து வசதி, தொந்தரவுகள் இல்லாமல் தரிசனம்
செய்ய பாரிக்கேட் வசதி, பாதுகாப்பு வசதி போன்ற பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
பங்கேற்ற பக்தர்களுக்கு தன்வந்திரி பிரசாதமாக சுக்கு-வெல்லம் பிரசாதத்துடன் மதியம்
அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
செய்திருந்தனர்.
No comments:
Post a Comment