வாலாஜபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
16 செல்வங்கள் பெறவும்
தொலைந்து
போன
நபர்
அல்லது
பொருள்
திரும்பக்
கிடைக்க,
ஸஹஸ்ரார்ஜூனர்
எனும் ஆயிரம் கையுடையான்
கார்த்தவீர்யார்ஜூனர்
ஹோமம்
வருகிற 11.02.2018ல் நடைபெறுகிறது.
16 செல்வங்கள் தரும் ஸ்ரீ கார்த்தவீர்ர்யாஜுனர்
:
கார்த்தவீர்யார்ஜுனரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள்,
கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.
இவரை வழிபட்டு, இவருடைய பூஜை மற்றும்
ஹோமங்களில் கலந்துகொண்டால் காணாமல் போன
நபர் அல்லது பொருள் திரும்பக்
கிடைப்பர், இழந்த செல்வ நிலையைத்
திரும்பப் பெறலாம், பிரம்மஹத்தி தோஷம்
நீங்கும், அடகு வைத்த
நிலம், நகையை விரைவில் மீட்டலாம்,
கடன் தீரும், பதினாறு வகையான செல்வங்களை பெற்று
வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 11.02.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல்
1.00 மணி வரை ஏகாதசி திதியை முன்னிட்டு உலக நலன் கருதி பதினாறு செல்வங்களான புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு,
தன்னம்பிக்கை, தானியம், சுகம், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, உடல் நலம், நல்லொழுக்கம்,
நீண்ட ஆயுள் பெறவும், இழந்த பொருள்களை திரும்ப பெறவும், தடைபட்ட காரியங்களில் வெற்றி
பெறவும், பிரம்மஹத்தி தோஷம்
நீங்கவும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம் நடைபெற்று அதனை தொடர்ந்து பால், தயிர்,
கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் கார்த்தவீர்யார்ஜுனர்க்கு
உரிய மலர்களை கொண்டு அஷ்டோத்தர நாமாவளி நடைபெற்று கார்த்தவீர்யார்ஜுன இரக்ஷையுடன் பிரசாதம்
வழங்கப்பட உள்ளது.
ஆயிரம் கையுடையான் :
ஸஹஸ்ரார்ஜூனர் , ஆயிரம் கையுடையான், கார்த்தவீர்யார்ஜுனர் என்ற பல்வேறு பெயர்களில் பக்தர்களால்
அழைக்கப்படுபவர் மகா விஷ்ணுவின்
சுதர்சன பகவானின் மறு அவதாரமாக போற்றி வழிபடுகின்றனர்.
க்ஷத்ரிய மாமன்னர் :
கத்ரி சமுதாய குலாதிபதியுமானவரும், மனித க்ஷத்திரியனாகிய
கார்த்தவீர்யர்ஜுனரே க்ஷத்ரிய மாமன்னராவார். இவரை ஆயிரம் கையுடையான் என்றும் ராஜ ராஜேஸ்வரன்
என்றும் பரசுராமரிடம் போரிட்டு தோல்வி கண்டவர், மகாராஜா என்றும் போற்றி வழிபடுகின்றனர்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கார்த்தவீர்யார்ஜூனருக்கு ஆலயம்:
இழந்த பொருளை மீட்டுத் தரும்
இறைவனாகவும், களவுபோன பொருளை கண்டுபிடிக்கும் கடவுளாகவும், ஆத்ரேய கோத்திரகாரர்களின்
குல தெய்வமாக விளங்குகின்றவரும், ஸ்ரீ தத்தாத்ரேயரின் நம்பிக்கையுடைய சீடருமான ஸ்ரீ
கார்த்தவீர்யார்ஜூனர்க்கு இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு பச்சைகல்லில் 4அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இழந்த
பொருட்களை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக 16 விதமான செல்வங்களை போற்றும் விதத்தில் 16 திருக்கரங்களைக்
கொண்டு 16 விதமான
ஆயுதங்களுடன் சுதர்சன சக்கரங்களுடன் காலில் பாதரக்ஷை கொண்டு
பார்த்தசாரதி பெருமாள் போன்று மீசையுடன், கதையுடன்,
சங்கு சக்கரத் தாரியாக கார்த்தவிர்யார்ஜூனர்
யந்திரத்துடன் 16 செல்வங்களும்
நாம் பெறும் விதத்தில் காட்சித்தரும்
திருக்காட்சியுடன் கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் பிரதிஷ்டை
செய்துள்ளார்.
இவருக்கு உதயபூர், குவாலியர், மாகேஷ்வர் போன்ற பல இடங்களில் வெவ்வேறு
திருநாமங்களுடன் இவரை அழைத்து வழிபடுகின்றனர்.
க்ருதா யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க
மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன்
அரசராக அவதரித்தார். இவர் முதலில் ஸ்ரீ
அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்.
ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும்
அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் சீடராவர்.
ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு கீழ்கண்ட வரங்களை
பெற்றவர் :
1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.
2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.
3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.
4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம். இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்கும் மந்திரம் :
ஓம்
ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய
நம: |
கார்த்த
வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்
||
தஸ்ய
ஸ்மரந மாத்ரேன கதம் நஷ்டம்
ச லப்யதே ||
ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம் :
ஓம்
கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய
தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ்
ப்ரசோதயாத்.
மேற்கண்ட பூஜையிலும் ஹோமத்திலும்
பங்கேற்க விரும்புபவர்கள் சுத்தமான பசு நெய், வெண்ணை, வெண்கடுகு, நாயுருவி, உலர்பழங்கள்,
பேரிச்சம்பழம், மாதுலை போன்ற சிகப்பு நிற பழங்கள், ஏலக்காய், இலவங்கம், போன்ற வாசனாதி
வச்துக்கள் கொடுத்து ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் அருள் பெறலாம். மேலும் விவரங்களுக்கு
கிழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும்
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033
/ 09443330203
No comments:
Post a Comment