தன்வந்திரி பீடத்தில்
மஹான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்
89 ஆவது ஆராதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
இன்று 09.01.2018 செவ்வாய்க்கிழமை ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி, மஹான்
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் 89 ஆவது ஆராதனை நடைபெற்றது. அண்ணாமலையார் வாழும் திருவண்ணாமலையில்
எண்ணற்ற மகான்களும் ஞானிகளும் வாழ்ந்த தவபூமியில் தனது 19-ம் வயதில் வந்த சேஷாத்திரி
சுவாமிகள், எம்பெருமான் உள்ளத்தில் வந்து அமர வேண்டுமென்பதற்காக, பக்தி, ஞான வைராக்கியத்துடன், சதா சர்வகாலமும் தியானம்,
ஜபம்,கோயில், குளம் என சுமார் நாற்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் உலவிவிட்டு தன
பூத உடலை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது
ஆத்ம சக்தி இன்னமும் தங்களுடன் இருப்பதாகவும், வழிகாட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
இதையொட்டி சேஷாத்ரி ஸ்வாமிகளின் 89 ஆவது ஆராதனை தன்வந்திரி பீடத்தில் தனுர்மாத பூஜையும், வேதபாராயணமும்,
மஹா கணபதி ஹோமமும், சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜையும், புஷ்பாஞ்சலியும்
இன்று நடைபெற்றது. தன்வந்திரி பீடத்தில் மஹான் குழந்தையானந்த ஸ்வாமிகளும் சேஷாத்ரி
ஸ்வாமிகளும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும்
சிறப்பு. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment