Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 5, 2018

தைப்பூசத்தில் (31.01.2018) காரியசித்தி ஹோமங்கள்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
தைப்பூசத்தில் (31.01.2018) காரியசித்தி ஹோமங்கள்
( சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தானகோபால யாகம் )
ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன என்பது உண்மை. இந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குறித்த வயதில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் வருகிற 31.01.2018 புதன் கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்யம் வேண்டி சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது. மேற்கண்ட மூன்று ஹோமங்களும் பிரதி மாதம் பௌர்ணமிதோறும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமங்களில் கலந்துகொண்டு தன்வந்திரி பகவான் அருளுடன் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிபெற்று சிறப்புடன் வாழ பிரார்த்திக்கின்றோம்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203



No comments:

Post a Comment