Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 19, 2017

Vinayaga Chaturthi 2017 - Maha Ganapathi Homam

ஆகஸ்ட், 25ல் - வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டுமஹாகணபதி ஹோமத்துடன்
23  இலைகளைக் கொண்டு சிறப்பு
அர்ச்சனை.


வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதூர்த்தி விழா வரும் 25.08.2017 தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது

14 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரியுடன் சிலை  வடிவமைக்கப்பட்டு கணபதிக்குரிய ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் 1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டு வாஞ்சாகல்ப லதா கணபதி ஹோமமும், 108 யாக குண்டங்கள் அமைத்து 108 சிவாச்சரியர்கள் பங்கேற்ற 108 கணபதி ஹோமங்கள்  நடைப்பெற்ற ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில்  விநாயகர் சதூர்த்தியை முன்னிடடு, கர்ம வினைகள் தீரவும், காரியங்கள் சித்தி பெறவும், பிராத்தனைகள் நடைபெறவும் மகாகணபதி ஹோமம், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஓரே கல்லில்லான விநாயகர் தன்வந்தரிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும்  கீழே கொடுக்கபட்டுள்ள 23 வகையான இலைகளைக்கொண்டு சிறப்பு அர்ச்சனை  நடைபெற உள்ளது.

இலைகளின் பெயர்கள்

முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை ஆகும். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203 Email : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment