Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 5, 2017

Aadi Kirthikai 15.08.2017 Special Homam

15 08.2017,ம் தேதி செவ்வாய்கிழமை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

ஆடிகிருத்திகையை சிறப்பு ஹோமங்கள்.


கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப் பெருமான் அவதரித்தார். அந்த ஆறு குழந்தைகளையும் பேணி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள் அறுவர். பின்னர் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆறுமுகனாக மாறினார். கார்த்திகை பெண்கள் பராமரித்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.

கார்த்திகை பெண்கள் :

கார்த்திகை பெண்கள் பற்றி நாம் அறிந்த செய்தி, அவர்கள் ஆறு குழந்தைகளாக இருந்த முருகனைப் பேணி வளர்த்தனர் என்பதுதான்ரிஷி பத்தினிகளான கார்த்திகை பெண்கள் அறுவர் பெயர்கள் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என்பவனவாகும். (மேலும் பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு).

வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.
மேலும் வருகிற,செவ்வாய் கிழமை 15.08.2017ஆடி கிருத்திகையை முன்னிட்டு  காலை 10.00 மணியளவில் நடைபெறும் ஸ்ரீசுப்ரமணியத்ரிசதி ஹோமத்திலும், சிறப்பு பிரார்த்தனையிலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033,  230274. செல் – 9443330203.

No comments:

Post a Comment