ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மஹாகணபதி ஹோமத்துடன்
23
இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை.
சமீபத்தில் 1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டு
வாஞ்சாகல்ப லதா கணபதி ஹோமமும், 108 யாக குண்டங்கள் அமைத்து 108
சிவாச்சரியர்கள் பங்கேற்ற 108 கணபதி ஹோமங்கள் நடைப்பெற்ற
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர்
சதூர்த்தி விழா இன்று 25.08.2017 வெள்ளிக்கிழமை, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி காலை 6.00 மணிக்கு கோ பூஜை,
6.30 மணிக்கு வேத பாராயணம், 7.00 மணிக்கு தன்வந்திரி பீடத்தில் உள்ள லக்ஷ்மிகணபதி,
வல்லபகணபதிக்கு அபிஷேக ஆராதனயும், 10 அடி உயரமுள்ள பாஹுபலி விநாயகர்க்கு சிறப்பு அலங்காரத்துடன்
ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை
10.00 மணீயளவில் பத்துக்குமேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று மஹா கணபதி ஹோமத்துடன்
தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.மேலும் உலக மக்களின் கர்ம வினைகள் நீங்கவும் ஊழ்வினைகள்
அகலவும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் 14 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி
பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத
வகையில் 4 அடி
உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு
புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரியுடன் அமைந்துள்ள சிலைக்கு மஹா
அபிஷேகம் செய்து துளசி மாலை, எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை சார்த்தி முல்லை
இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை,
அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை
இலை, வன்னி இலை, நாயுருவி
, கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம்
இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி
இலை, மாதுளை இலை, தேவதாரு
இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை,
ஜாதிமல்லி இலை, தாழம் இலை,
அகத்தி இலை, தவனம் இலை,
தும்பை இலை, குண்டுமணி இலை
போன்ற 23 வகையான
இலைகளைக்கொண்டு சிறப்பு ஸஹஸ்ர நாம
அர்ச்சனையும் சதுர்வேத பாராயணமும் சோடச உபச்சாரத்துடன் மஹா மங்களார்த்தி நடைபெற்றது.
இதில் விநாயகற்கு பிடித்தமான பொரி, கடலை, அவல், கொழுக்கட்டை, சுண்டல், வடை, அப்பம்,
பாயசம், கரும்பு, கொய்யாபழம் போன்ற பொருள்கள் நிவேதனமாக சமர்ப்பிக்கபட்டது. பீடத்தில்
நடைபெற்ற அன்னதானத்தில் அனைவரும் பங்கேற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தினர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை
– 632 513. வேலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment