Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 5, 2017

Srikrishna Jayanthi 2017

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

கிருஷ்ண ஜெயந்தி விழா.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 14.08.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில் கிருஷ்ண ஜெயந்திகோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் பிரார்த்தனை.

நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று  சாதாரணக் குழந்தை வடிவானான்.3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் 14ம்தேதி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள, நாம் அவரை "கீத கோவிந்தம்'',"ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

வழிபாட்டு முறை:

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.

தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து ஆலயத்திற்கு அழைத்து செல்வார்கள்.ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்கண்ணனின் பரிபூரண அருள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது.

பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.

மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

இத்தனை நலன்களை தரும் கிருஷ்ணனுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் கருங்கல்லில் ஆன உஞ்சலில் நவநீத கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து மாதம்தோறும் ஸ்ரீ கிருஷ்ண ஹோமம், நவநீத கிருஷ்ண ஹோமம், இராஜகேபாலா யாகம், சந்தான கோபால யாகம் போன்ற யாகங்கள் நடைபெற்று தம்பதிகள் கைகளினால் ஊஞ்சல் தாலாட்டு, வெண்ணெய் சாற்றுதல் போன்ற வைபவங்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்று வருகிறது.

அனைவரும் மேற்கண்ட பலன்கள் அடையவும், ஆரோக்யத்துடன் ஆனந்தமாக இருக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமங்களையும், கூட்டு பிரார்த்தனைகளையும் செய்து வருகிறார்.
மேலும் 14.08.2017 திங்கட்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சிறப்பு ஹோமமும், கூட்டுபிரார்த்தனையும் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் பக்தர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை -  632513.

Ph:  04172- 230033, 9443330203


Bank Details :Name : Sri Muralidhara Swamigal , Bank Name : State Bank of India,
Account Number : 10917462439, Branch : Walajapet, Bank Code:0775,
IFSC: SBIN0000775


No comments:

Post a Comment