தன்வந்திரி பீடத்தில்
71வது சுதந்திர தினவிழா 15.8.2017
நடைபெற உள்ளது
SRI BHARATHA MATHA TEMPLE AT SRI DANVANTRI PEEDAM, WALAJAPET. |
தன்வந்திரி
பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா15.8.2017
காலை 8.00 மணிக்கு ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர
தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.
அரும்பாடுபட்டு
நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை
பேணிக் காப்பது நமது
கடமையாகும். அந்த வகையில் கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரதத்
தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின்
காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின்
காரணமாகவும், தனது அன்னையின் வாக்கின்படி
வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு
பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும்,
இதா 73 பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை
செய்துள்ளது மட்டுமல்லாது இதுவரை
எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழை
பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற
குழந்தைகளாக பாதுகாத்திடும்
அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து உலக நலன்
கருதி வழிபட்டு வருகிறார் என்பது ஸ்வாமிகளின் கூடுதல்
சிறப்பாகும்.
நாளை
15.8.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில்
பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர
தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.. மேலும்
இந்த வைபவத்தில் அனைத்து பொதுமக்களும் வந்திருந்து
பங்கேற்று பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளையும்
பெறவேணுமாய் தன்வந்திரி குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தேக
நலன் மட்டும் இல்லாமல் தேச
நலம் அவசியம் என்பதை உணர்த்தும்
வகையில் இந்த சுதந்திர தின விழா நடைபெற
உள்ளது என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் .
தேசபக்தியுடன்
சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி,
தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க
பாரதம்!!!
தொலைபேசி
: 04172 – 230033, செல் –
9443330203
Email : danvantripeedam@gmail.com
Web :
www.danvantritemple.org |
www.danvantripeedam.blogspot.in
No comments:
Post a Comment