வேலூர் மாவட்டம்,
வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் இன்று காலை 08.00 மணியளவில் கோபூஜை, யாகசாலை பூஜையுடன் நவக்கிரஹக தோஷங்கள் நீங்கி வாழ்வில்
எதிர்வரும் தொல்லைகள் நீங்கி நன்மை பெறவும்,
மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டியும், திருமணத்தடை விலகவும், சர்ப்ப தோஷம்,
நாக தோஷம், அகலவும், பித்ருக்களை திருப்திப் படுத்தவும்,
பஞ்ச பட்சி தோஷங்களில் இருந்து நிவாரணம்
பெறவும், நிலம், வீடு, மனை, பாக்கியம் பெறவும், தொழில் தடை நீங்கி மேன்மைபெறவும்,
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இன்னல்கள்
அகலவும், மழை பெய்து விவசாயிகள் வாழ்வில்
மகிழ்ச்சி பெறவும், ஆலயங்கள் அபிவிருத்தி பெறவும், ஆலயங்களில் நடைபெறும் திருப்பணிகள் விரைவாக செய்து முடிக்கவும் போன்ற
பல்வேறு காரணங்களுக்காக 15 க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள்
கலந்து கொண்டு நவக்கிரஹங்களில் உள்ள ஒவ்வொரு கிரஹங்களுக்கும் 10,000 ஜபம் வீதம், 9 தசாபுத்திகளுக்கு 10,000 ஜபம் வீதமும் “ஒரு
லட்ச நவக்கிரஹ மூல மந்திர ஜபம் செய்து” 10,000 ஆவர்த்திகள் என்ற முறையில் மாபெரும் “லட்ச ஜப நவக்கிரஹ ஹோமம்” நடைபெற்றது.
இதில் அந்தந்த கிரஹத்துகுரிய தானியங்கள்,
சமித்துக்கள், பழங்கள், புஷ்பங்கள், பட்சணங்கள், நிவேதனங்கள் கொண்டும் தேன், நெய், விஷேச மூலிகைகள் சேர்க்கப்பட்டது. யாகத்தின் நிறைவாக காலச் சக்கரமாக பீடத்தில் அமைந்துள்ள, நவக்கிரஹ, ராசி, நட்சத்திர விருட்சங்களுக்கு விருட்ச பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கு பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment