Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, November 11, 2016

நவம்பர் 13 முதல் 19 வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் துவக்கம்

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமம், கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட தினங்களில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் நடைபெற உள்ளது.

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் ஆச்சார்ய பெருமக்களின் ஆலோசனையின்படி ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி ஸமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை ஸமேத மரகதேஸ்வரருக்கும் இதர 73 விதமான பரிவார தெய்வங்களுக்கும், 468 சித்தர்களுக்கும் சென்ற ஆண்டு 29.11.2015 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதன் ஸம்ப்ரோக்ஷணம் நிறைவு விழா ஐப்பசி 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை 4ம் தேதி (19.11.2016) வரை காணாபத்யம், கெளமாரம், செளரம், ஸ்ரீ சாக்தம் மற்றும் வைணவம் அகிய ஆறு மதங்களில் உள்ள தெய்வங்களுக்கும், மஹான்களுக்கும் ஸம்வத்ஸராபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வைபவத்தில் அனைவரும் பங்கேற்று குருவருளுடன் திருவருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நிகழ்ச்சி நிரல்:
13.11.2016   ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை மங்கள இசை, கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தேவதா அனுக்ஞை, கிராம தேவதா பூஜை, முனீஸ்வர பூஜை, நவகன்னி பூஜை, வாஸ்து ஹோமம், மஹா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு, ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குதல்.

14.11.2016   திங்கட்கிழமை        காணபத்யம் சார்ந்த ஹோமங்கள்
15.11.2016   செவ்வாய் கிழமை    கெளமரம் சார்ந்த ஹோமங்கள்
16.11.2016   புதன் கிழமை         செளரம் சார்ந்த ஹோமங்கள்
17.11.2016   வியாழக்கிழமை       சைவம் சார்ந்த ஹோமங்கள்
18.11.2016   வெள்ளிக் கிழமை          ஸ்ரீ சாக்தம் சார்ந்த ஹோமங்கள்
19.11.2016   சனிக் கிழமை        வைணவம் சார்ந்த ஹோமங்கள்  

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுராவாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701
e-mail: info@danvantritemple.org      homam@danvantritemple.org      danvantripeedam@gmail.com
 




No comments:

Post a Comment