வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், இன்று (14.11.2016) டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி “காணாபத்யம் முறையில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி,
ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்,
ஸ்ரீ விநாய தன்வந்திரி ஆகிய தெய்வங்களுக்கு காலை யாகசாலை பூஜைகளுடன் துவங்கி மஹா
ஹோமங்கள் செய்து “ஸம்வத்ஸராபிஷேகம்” நடைபெற்றது.
மேலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு
ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும், ராகுகேதுவுக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது (ப்ரதி மாதம்
பௌர்ணமியில் ராகுகேதுவுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது) இதனைத் தொடர்ந்து 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் .வேலூர் அணைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு கலையரசு, கள்ளக்குறிச்சி லட்சுமி ஜுவல்லர்ஸ் உரிமையாளர்
திரு. தண்டபாணி, காட்பாடி ஜெயசங்கர்,
மும்பை வெங்கண்ணா, டாக்டர். ரங்கராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும், அன்னாபிஷேக பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை 15.11.2016 செவ்வாய்க்கிழமை
காலை 10.00 மணியளவில் கௌமார தெய்வமான கார்த்திகை குமரனுக்கு
“ஸம்வத்ஸராபிஷேகம்” அபிஷேகம் நடைபெற உள்ளது.
இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.
இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ்,
சென்னை. மற்றும் திரு.முருகையா IAS, மாநில
ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகியோர் தன்வந்திரி பீடத்தில்
தன்வந்திரி ரதம் இழுத்து வழிபாடு செய்த காட்சி.
ராகு கேது அன்னாபிஷேக காட்சி
No comments:
Post a Comment