வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், துன்முகி ஆண்டு ஐப்பசி மாதம் 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை மாதம் 4ம் தேதி (19.11.2016) வரையிலும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஸமேத
தன்வந்திரி பெருமாள் மற்றும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ள இதர 73 விதமான பரிவார தேவதைகளுக்கும் கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி “ஸம்வத்ஸராபிஷேகம்”
சப்தாஹமாக நடைபெற உள்ளது.
முதல் நாளான 13.11.2016
அன்று கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி 14.11.2016 அன்று காணாபத்யம் சார்ந்த
கடவுள்களுக்கும், 15.11.2016 அன்று கெளமாரம் சார்ந்த கடவுள்களுக்கும்,
16.11.2016 அன்று செளரம் சார்ந்த கடவுள்களுக்கும்,
17.11.2016 அன்று சைவம் சார்ந்த கடவுள்களுக்கும்,
18.11.2016 அன்று ஸ்ரீ சாக்தம் சார்ந்த
கடவுள்களுக்கும், இறுதி
நாளான 19.11.2016
அன்று வைணவம் சார்ந்த கடவுள்களுக்கும் மஹா ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, சிறப்பு திருமஞ்சனம், மஹா மங்களார்த்தி நடைபெறும். இதனை தொடர்ந்து,
ஸ்ரீமத் வேதாந்த தேசிகருக்கும், ஸ்வாமிகளின் குருவும்
பெற்றோருமான ஸ்ரீ கோமளவல்லி ஸமேத ஸ்ரீநிவாசருக்கும் ஸ்ரீ பாதங்களுக்கும் சிறப்பு பூஜைகள்
நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்படும்.
இவ்வைபவத்தில் சுற்றுப்புற நகர பொதுமக்கள், அருளாளர்கள், அனைத்துதரப்பு மக்கள் மற்றும் தன்வந்திரி பக்தர்கள் பங்கேற்று குருவருளுடன்
திருவருள் பெற அழைக்கின்றோம். மேற்கண்ட ஏழு நாட்களும் சிறப்பு
அன்னதானத்துடன், கலை நிகழ்ச்சிகள், இசை
நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment