
தன்வந்திரி
பகவான் யார்
தன்வந்திரி
பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம்
ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள
ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான
நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தைலாபிஷேகம்
செய்வதால் ஏற்படும் பலன்கள்
இங்கு தைலம்
என்பது நல்ல எண்ணையை கொண்டு முலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் நடை பெற உள்ளது.
நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து
எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய
விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம்
உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும் எள்ளு ஹோமமும் எள்ளு எண்ணையை
கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி ப்ரீத்திக்காகவும், பித்ரு
தோஷ நிவர்த்திக்காகவும் இதர ருண ரோக நிவாரணத்திற்காக. இத்தகைய நல்லெண்ணெயினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம்
நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும், பித்ரு சாபம் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழறை சனி அஷ்டம சனி அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும்
பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண்
சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும்.
வருடாந்திர தைலாபிஷேகம் பூர்த்தியுடன்
டிசம்பர் 14ம் தேதி 108 சுமங்கலி பூஜையும், டிசம்பர் 15ம் தேதி 108 மூலிகை தீர்த்தத்தினால்
தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகம் செய்து,
சிறப்பு நோய் நிவாரண ஹோமத்துடன் விசேஷ வழிபாடுகள் செய்து தைலாபிஷேகம் நிறைவடைகிறது.
இந்த விஷேசமான வைபவத்தில் அனைத்து பக்தர்களும்
பங்கேற்று பயன் பெற பிராத்திக்கின்றோம். இந்தத்
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033
Cell :
9443330203
e-mail: danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment