19.11.2016 சனிக் கிழமை காலை
ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் திருக்கரங்களால் ஒரு கோடி ஸ்ரீ
தனலட்சுமி ஜபயக்ஞம் துவக்கி வைக்கப்பட்டு இன்று 29.11.2016 செவ்வாய்க்கிழமை வரை காலை மாலை இருவேளையும் கோபூஜையுடன் ஜப ஹோம பூஜைகளும், மஹாசங்கல்பம் கணபதி பூஜை, வாஸ்த்து
புருஷஆகர்ஷண ஹோமம், தன்வந்திரி கணபதி பூஜை, தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கு ஹோமம், அஷ்ட லட்சுமி அங்குரார்பண பூஜை, நவக்கிரஹ
பூஜை, மஹாலட்சுமி யந்திர பூஜை, தன்வந்திரி கணபதி ஹோமம், வாஸ்து
புருஷ ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி ஹோமம், பரிவார
தேவதைகள் ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், நவக்கரஹ
ஹோமம், சகலதேவதா காயத்ரி ஹோமம், ஒரு கோடி தனலட்சுமி பீஜாட்ஷர ஹோமம் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் லலிதா சகஸ்ர நாமம் மஹாலட்சுமி, த்ரிசதி, லட்சுமி நாராயண த்ரிசதி மஹாலட்சுமி ஸ்தோத்திரம்
பாராயணம் முடிந்து தீபாரதனை நைவேத்தியம் மந்திர புஷ்ப்பம், சதுர் வேத பாராயணம் மஹாஆரத்தி நடைபெற்றது. ஸ்ரீ ஆரோக்ய லட்சுமிக்கு
சிறப்பு அபிஷேகத்துடன் 1008 தாமரை
மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. மேற்கண்ட யக்ஞத்தை சுக்ல யஜீர் வேத சாஸ்த்திரிகள் ஸ்ரீமான் வேலூர் K.B. சூரிய நாராயண ஷர்மா அவர்கள் தலைமையில் 10க்கும்
மேற்பட்ட ரித்விக்கள் பங்கேற்று சிறப்பாக நடத்தித் தந்தனர்.
மேற்கண்ட யாகங்களில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், செங்கல்பட்டு திருவடி சூலம் ஸ்ரீ தேவி
கருமாரியம்மன் ஆலய பீடாதிபதி தவத்திரு மதுரை முத்து ஸ்வாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு. A.K. ராஜன், இராணிப்பேட்டை
நாக் லதர்ஸ் மற்றும் நாக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு.பிள்ளை, வாலாஜாபேட்டை தொழில் அதிபரும் பிரைட் மைண்ட்ஸ்
கல்வி நிறுவனத்தின் நிர்வாகியான W.R. மகேந்திரவர்மன், மருத்துவர் கஸ்தூரி சத்தியமங்களம்,
DR.ரங்கராஜன், அலமேலு பாஸ்கர் மற்றும் வெளிநாட்டு
வாழ் பக்தர்கள், உள்ளூர் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும்
பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை சத்தியசாய்
பக்தர்கள், பாண்டிச்சேரி பக்தர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை
செய்தனர்.
மேற்கண்ட அனைத்து நாட்களிலும் சிறப்பு
அன்னதானங்கள் நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது 108 சுமங்களிகளுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு
மங்களப்பொருட்களுடன் தனலட்சுமி யந்திரம், குங்கும பிரசாதம்,
2017ம் ஆண்டு நாட்காட்டி வழங்கப்பட்டது என்று தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment