25.05.2014 ஞாயிறு அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. இரா.நந்தகோபால் அவர்கள் பீடத்திற்கு வருகைதந்த போது பீடத்தின் வருகையாளர் பதிவேட்டில் எழுதிய குறிப்பு :
மனதிற்கு இனிமை தரும், உள்ளத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும் அற்புதமான ஸ்தலம் இது. இங்கு உள்ள அனைத்து விக்கிரகங்கள் மற்றும் தன்வந்திரி சுவாமிகளின் அருள்பாலிக்கும் புன்னகை வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒரு பெருஞ்சிறப்பு. பிரார்த்தனை வைத்து அது நிறைவேறும்போது அதற்கு காரணகர்த்தாவை வணங்க வரும் கூட்டம் இங்கே அதிகம். எம்மதமும் சம்மதம் என்ற உயரிய கோட்பாட்டினை அனைவருக்கும் உணர்த்தி, ஒரு அற்புதமான இறைப்பணியை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் ஆற்றிவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பணி பாராட்டிற்கும் வியப்பிற்கும் உரியது. இந்த பீடம் ஆல்போல் தழைத்து வளரவும், இறையருளை உலகெங்கும் பரப்பவும் எனது மனப்பர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீ தன்வந்திரி கணபதி ஸ்வாமிக்கு எண்ணெய்
அபிஷேகம் செய்கிறார். உடன் கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
Doing the Oil Abishegam to
Lord Sri Danvantri Ganapathy
|
ஸ்ரீ ப்ரத்தியங்கரா தேவி யாககுண்டத்தில்
மிளகாய் மற்றும் மூலிகை பொருட்களை இடுகிறார்.
Put Red Chilies and Herbals in Lord Sri Pratiyangara
Yaga Kundam
|
நோய் தீர்க்கும் கடவுளான
ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் வேண்டுதல்.
Prayer to Lord Sri Danvantri Bagavaan
|
அவதார் பாபா சன்னதியில் தரிசனம்.
In Avatar Baba sannadi…
|
No comments:
Post a Comment