உலக அன்னையர் தினம் மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாடு வேண்டி மே 11ம்தேதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அன்னையரின்றி உலகில் மனிதப்பிறவி என்பது இல்லை. அந்த அன்னையரை போற்றும் விதமாக நேற்று உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, அன்னையர் குலம் நோய்நொடியின்றி நன்றாக வாழவும், தாய் சேய் நலன், பெற்றோர் பிள்ளைகள் நல்லுறவு, முதியோர் நலன், ஆரோக்கியம் வேண்டி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி, ஸ்ரீஅன்னபூரணி, வேதமாதா ஸ்ரீகாயத்ரிதேவி ஆகிய சன்னதிகளிலும், மாணவர்களின் கல்வி திறன் வளரவும், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையவும், அவர்களுக்கு விரும்பிய துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கவும், நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் நல்ல துறைகளில் கல்வி வாய்ப்பு கிடைக்கவும் லஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வாணி சரஸ்வதி ஆகிய சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அத்துடன் கல்வியில் மாணவர்களின் கல்வித்திறன் வளரவும், வித்யா லஷ்மி, சரஸ்வதி, ஹயக்ரீவர் ஹோமமும் நடைபெற்றது. பூஜையிலும், ஹோமத்திலும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment