Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 1, 2014

தன்வந்திரி பகவானுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தேனாபிஷேகம்.

உலகத் தொழிலாளர் தினத்தையொட்டி வாலாஜாப்பேட்டை
கீழ்ப்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்  மே 1ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 8 அடி உயரமுள்ள மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தேனாபிஷேகம் நடைபெற்றது.
தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன் கருதியும்,
நிர்வாகத்தினருக்கும் தொழிலாளருக்கும் இடையே நல்லிணக்கம்
ஏற்படவும், நன்மதிப்பு கூடவும், அவர்களின¢ மன, உடல் ரீதியான
நோய்கள¢ நீங்கி ஆனந்தம் பெறவும், அனைவருக்கும் உடல் நலம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் கிடைக்கவும், குழந்தைகளின் கல்வி மேம்படவும், வாக்கு சுத்தமாக இருக்கவும், வயிறு, குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் தீரவும், மகிழ்ச்சி ஏற்படவும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளைப் பெற வேண்டி 10வது ஆண்டாக தேனாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அபிஷேகத்தேன் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment