Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, May 13, 2014

நரசிம்ம ஜெயந்திவிழா

 மே 13ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தனது பக்தன் குழந்தை பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி தூணிலிருந்து வெளிப்பட்டு, பக்தர்களை துன்புறுத்தி வந்த அரக்கன் இரண்ய கசிபுவை அழித்தருளிய அவதாரத் திருநாளே பக்தர்களால் அவரது ஜெயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள, உலகில் வேறெங்கும் காண இயலாத வகையில், இரண்டு வண்ணங்கள் கொண்ட இருவகை கற்களால் உருவாக்கப்பட்ட, கூர்மாவதார பீடத்தின் மேல் ஸ்ரீலஷ்மி தாயாருடன் வீற்றிருக்கும் ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் ஸ்வாமிக்கு காலை 10 மணியளவில் நரசிம்ம ஹோமமும், திரவியங்கள் மற்றும் முலிகைகள் அபிஷேகமும் நடைபெற்றது. பொருளாதாரப் பிரச்சனைகள், கடன் தொல்லைகள், வழக்கு வியாஜ்யம், மனதில் அச்சம், குடும்பத்தில் அமைதியின்மை போன்றவற்றிலிருந்து நிவர்த்தி தருபவர் என்பதால், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பானகம், பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.






No comments:

Post a Comment