15.06.2014 ஞாயிறுக்கிழமை மற்றும் 19.06.2014 வியாழக்கிழமைகளில்
குரு சுக கிரகங்களில் வலிமை பெற்றவன். குருவின் பார்வை சகல நலன்களையும் தருவதாகும். திருமணத்திற்கு குருபலம் வருவது முக்கியமாகக் கருதப்படுகிறது. குரு பகவானை வழிபட்டால் புகழையும், கீர்த்தியையும் வாக்கு வன்மையையும் அளிப்பார்.
குரு பார்வை பெற்றால்தான் திருமணம். குழந்தை செல்வம், சிறந்த பதவி, சொத்து, சுகம் கிடைக்கும். சாத்வீக குணமும் மஞ்சள் நிறமும் உடைய இவரைப் பொன்னான் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாள சிந்தை உடையவர். தன்னை வழிபடுகிறவர்களுக்குப் பிறரை வணங்காத உயர்வான பதவியையும் மதம் நீதி மனமகிழ்ச்சி புத்திரப்பேறு செல்வம் முதலியவற்றையும் கொடுப்பவர்.
கடல் கடந்து சென்று தொழில் நடத்தவும், செல்வம் சேர்க்கவும் குருவின் அமைப்பு ஜாதகத்தில் பலமாக இருக்கவேண்டும். குரு, சனி, சந்திரன் மூன்றின் அமைப்பு ஜாதகத்தில் நல்ல விதமாக இருந்தாலோ சேர்க்கை ஏற்பட்டாலோ கடல் கடந்து புகழ்பெறவும் செல்வச் சீமான் ஆவதற்கும் வழி வகைகள் தாமாகவே ஏற்படும்.
குருவுக்கும், குரூர தன்மை உண்டு. கெட்டு விட்டால் அவனுக்குச் சாந்தியும் பூஜையும் செய்வது நன்மை பயக்கும் குருவாரம் - வியாழக்கிழமை - விரதம் இருப்பது நல்லது.
ஜாகத்தில் குரு கெட்டிருந்தாலோ குரூரமானவராக இருந்தாலோ, கோசாரப்படி கெட்டவரானாலோ குருவுக்குச் சாந்தி செய்தால் நலம் ஏற்படும். வியாழன் தோறும் விரதம்இருந்து அவரைப் பூஜித்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களைச் செய்யும் ஆற்றல் போன்றவை காணப்படும். குரு பகவான் கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை ஏற்படுத்துவார். குளிர்ச்சியான கப நோய்களை கொடுப்பார். அடக்கம், நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொடுப்பார்.
இவன் சுப ஆதிபத்யம் பெற்றவர்களுக்கு ஆட்சி உச்சம் நட்பு சமம் பெற்று சுபஸ்தானங்களில் நின்றிருந்தால் அதன் தசையில் நற்பலன்களே நடக்கும். மாறாக இருப்பின் தீய பலன்கள் நடக்கும்.
குரு தசை நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க ஆதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வரவேண்டும்.
திருமணம், குழந்தை பாக்கியம், பணி உயர்வு, வேலைவாய்ப்பு, கல்வி, புதிய வீடு கட்டுதல் போன்றவற்றில் மாறுதல்களை ஏற்படுத்தும் குருப் பெயர்ச்சி முக்கியமான ஒன்று. இந்த ஜெய ஆண்டில் 19.06.2014 வியாழக்கிழமையன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இந்த குருப்பெயர்ச்சியால் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடியவர்கள் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களாவர். மேற்கண்ட ராசிக்காரர்கள் நலனுக்காகவும், இதர ராசிக்காரர்களின் ஷேமத்திற்காகவும் ஸ்ரீ தன்வந்திரி ஆராக்கிய பீடத்தில் 15.06.2014 ஞாயிறு மற்றும் 19.06.2014 வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் பக்தர்கள் பங்கு பெறும் விதத்தில் குருப்பெயர்ச்சி மஹா யாகம், சிறந்த வேத விற்பனர்களைக் கொண்டு நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு குருப்பெயர்ச்சியானது, சனிப் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய தீங்குகளின் பலத்தை குறைக்கக் கூடியதாய் உள்ளதால் இந்த யாகத்தில் மேற்கண்ட ராசிக்காரர்கள் மட்டுமின்றி, நவம்பர் மாதம் முதல் ஜென்ம சனியால் பாதிக்கப்பட உள்ள விருச்சிக ராசியினரும் கலந்து கொண்டு பயனடையலாம்.
No comments:
Post a Comment