வாலாஜாப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 8ம் தேதி ராமநவமி விழா சிறப்பு அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் ராம நவமி கொண்டாடப்பட்டது. ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் விக்கிரகத்திற்கு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன.
தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமர் சீதையுடன், அதே பீடத்தில் லட்சுமணர், பரதர், சத்ருகனர், ஈஸ்வரர், விநாயகர், முருகர், நாரதர், வசிஷ்டர், ஆஞ்சநேயர், தசரதர், சூரிய பகவான் ஆகியோரும் அமைந்துள்ள அபூர்வமான விக்கிரகம் உள்ளது. இந்த விக்கிரகத்திற்கு பஞ்ச திரவிய அபிஷேகமும், ஹோமமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு ராமருக்குகந்த பானகமும், நீர் மோரும் வழங்கப்பட்டது. பட்டாபிஷேக ராமரை வணங்குவதால், பதவி, ராஜ்யம், பரிபாலனம், அந்தஸ்து போன்றவற்றில் வளர்ச்சி ஏற்படும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment