Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, April 18, 2014

ஸ்ரீதன்வந்திரிபீடம் ஆன்மீக அலைகளும்
இறை சக்தியும் நிரம்பிய இடம்!
விஸ்வயோகி விஸ்வாம்ஜி மஹராஜ் குரு
பக்தர்களுக்கு அருளுரை

    ஆந்திர மாநிலம் குண்டுர் அருகில் விஸ்வம் நகரில் மாபெரும் மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு சேவை புரிபவரும், ஆந்திர மக்களால் தத்தாத்ரேயர் என்று போற்றப்படுவருமான ஸ்ரீ விஸ்வயோகி விஸ்வாம்ஜி மஹராஜ் விஸ்வகுரு அவர்கள் அவருடைய 70வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 18.04.2014 வெள்ளிக்கிழமை வாலாஜாப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு வருகை புரிந்தார்.































         காலை 10 மணியளவில் அவரது நலன் வேண்டி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற்ற மாபெரும் ஆரோக்கிய வேள்வியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.
          அப்போது, இந்த பீடம் ஆன்மிக அலைகள் நிரம்பிய இடமாக இருக்கிறது. இங்கு ஆரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்து. ஹோமங்கள் நடத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். பஞ்சபூதங்களின் சேர்க்கையே இந்த உடலும் உலகமும். இந்த சேர்க்கையில் வித்தியாசம் ஏற்படும்போது. பூமியில் சுனாமி, பூகம்பம், எரிமலை சீற்றம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படுகிறது. இதே போல் உடலில் வித்தியாசம் ஏற்படும்போது உடலில் நோய் ஏற்படுகின்றது. இதை தீர்க்க, பஞ்சபூதங்களின் சேர்க்கை நாயகனான ஸ்ரீ நாராயணரை துதிக்க வேண்டும். தன்வந்திரி பகவானும் விஷ்ணு நாராயண சொரூபமானவரே. இருவரும் வேறு வேறு அல்ல, ஒருவரே. எனவே பஞ்சபூதங்களின் சேர்க்கையும் இறை சக்தியும் சரியாக அமைந்துள்ள இந்த தன்வந்திரி ஆரோக்கியபீடத்தில், பகவானை வேண்டி நாம் நடத்தும் யாக ஹோமங்களினால் நாம் ஆரோக்கியமாக வாழமுடியும் என்று அருளுரை வழங்கினார்.

No comments:

Post a Comment