.
By வாலாஜாபேட்டை
First Published : 10 March 2014 04:44 AM IST
வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஹயக்ரீவர் சரஸ்வதி, வித்யாகணபதி ஹோமம் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் ஞாபக சக்தி ஏற்படவும், தேர்வு பயமில்லாமல் இருக்கவும் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஹோமம் முடிந்தவுடன் ஸ்ரீதன்வந்திரி, விநாயகர்,சரஸ்வதி,ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சந்நிதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டதாக பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment