Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 30, 2013

சகல தேவதா காயத்ரீ ஹோமம்

03.06.2013 திங்கட்கிழமை முதல்
உலக நலன் கருதி
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும்

சகல தேவதா காயத்ரீ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சமீபத்தில் ஆன்மீக வரலாற்றில் சோதனைகளை வென்று அரிய பெரிய பல சாதனைகளாக 1,32,000 கொழுக்கட்டை கொண்டு மஹா கணபதி யாகம், 108 ஹோமகுண்டத்தில் 108 கணபதி ஹோமம், 74 குண்டங்களில் 74 பைரவர் யாகம், 468 குண்டங்களில் 468 சித்தர்கள் ஹோமம், பஞ்சமூர்த்தி திருக்கல்யாணம், 24 மணி நேரத்தில் 27 ஹோமங்கள், 1008 பூசணிக்காய் கொண்டு திருஷ்டி துர்கா யாகம், லக்ஷ ஜப தன்வந்திரி மஹா யாகம், ஸ்ரீ தன்வந்திரிக்கு 1008 கலசாபிஷேகம், 365 நாட்கள் 365 யாகம், 55 நாட்கள் 135 ஹோமங்கள், 100 நாட்கள் 100 ஹோமங்கள், 48 குண்டங்களில் காலச்சக்கரம் யாகம், நெய் மிளகாய் கொண்டு நிகும்பலா மஹாயாகம், அதிருத்ர மஹாயாகம், 19 ஆண்டுகளாக மஹேஸ்வர பூஜை, குரு பாதுகா பூஜை, தேய்பிறை அஷ்டமி பைரவர் ஹோமம், 100க்கும் மேற்பட்ட ஸ்வயம்வரகலா பார்வதி, கந்தர்வராஜ, ஸந்தான கோபால ஹோமங்கள், குருபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஹோமங்கள் மற்றும் சனிசாந்தி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் தில தர்ப்பண ஹோமம் மேலும் பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய லக்ஷ்மி சுதர்சன யாகம் போன்ற பல ஹோமங்கள் செய்து சாதனைகளை நிகழ்த்திக்கொண்டு வருகிறார்.

தற்பொழுது ஒரு புதிய முயற்சியாகவும், சாதனையாகவும் ஸ்வாமிகளின் குருவருள், திருவருள் துணைக்கொண்டு அனைவரும் பயன்படும் வகையில் உலக நலன் கருதி மங்களகரமான விஜய வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி 3.06.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் சகல தேவதா காயத்ரீ ஹோமம் (கீழ்கண்ட தெய்வங்களுக்கு) காயத்ரீ மந்த்ர ஹோமம் செய்யப் பெற்று ஸம்ப்ரோக்ஷணம் செய்து உபசார பூஜைகள் நடைபெறும். யாகசாலையில் விசேஷ மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், பிரசாதங்கள், பட்சணங்கள் கொண்டு யாகம் நடைபெற உள்ளது.

அனைத்து தெய்வங்களின் மிக சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரங்களால் ஹோமம் நடைபெறுவதால் திருமணத் தடை, ஸந்தான பாக்யம், தொழில், வியாபாரம், விவசாயம், உத்யோகம், கல்வி, வீடு, வாகனவசதி, கடன் நிவர்த்தி, கிரக தோஷ நிவர்த்தி, சத்ரு உபாதைகள், த்ருஷ்டி உபாதைகள் நிவர்த்தி, ஸர்வ வியாதி நிவர்த்தி, ஆரோக்ய ப்ராப்தி போன்ற அனைத்து விதமான ப்ரார்த்தனைகளுக்காகவும் யாகசாலையில் சங்கல்பம் செய்யப்படும். பக்தர்கள் அனைவரும் ஸகல தேவதா காயத்ரீ யாகத்தில் கலந்து கொண்டு இறையருளுடன், பீடத்தில் அமர்ந்திருக்கும் மகான்களின் அருளையும், 468 சித்தர்களின் ஆசியையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த ஹோமங்களின் வாயிலாகமூலிகை ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி, வேத ஆராய்ச்சி, சமயம், கலை, பண்பாடு, இலக்கியம் போன்ற பல ஆராய்ச்சிகளைச் செய்ய ஏதுவாக அமையவுள்ளது மேற்கண்ட ஹோமங்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த ஹோமமானது சிறந்த வேத விற்பன்னர்களான வேத சிவாகம வித்யா பூஷணம் ஸ்ரீ ராஜப்பா சிவம், ஸ்ரீ விவேகானந்த சிவம் மற்றும் ஸ்ரீ ராஜீவ்காந்தி சிவம் ஆகியோர்களால் நடத்தப்பட உள்ளது.

நேரம் : காலை 10.00 மணி முதல்
பிற்பகல் 1.00 மணி வரை.
இடம் : இராஜலட்சுமி ஹால், ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

விஷ்ணு அவதார தெய்வங்கள்
 • காக்கும் கடவுள் ஸ்ரீ தன்வந்திரி
 • சுகம் தரும் ஸ்ரீ சுதர்சனாழ்வார்
 • கோடி நன்மை தரும் ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர்
 •  பகைவர்களை விரட்டும் ஸ்ரீ பால ரங்கநாதர்
 • நவரசம் பொங்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்
 •  பதவி தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்
 • காணாமல் போனவற்றை கண்டு பிடிக்கும் காவல் தெய்வம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர்
 • கஷ்டம் தீர்க்கும் ஸ்ரீ கருடாழ்வார்
 • சஞ்சலம் போக்கும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்
 • ஞானமளிக்கும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்


சிவன் அவதார தெய்வங்கள்
 • அன்பே சிவம் ஸ்ரீ மரகதேஸ்வரர்
 •  வினை தீர்க்கும் ஸ்ரீ விநாயகர், பிணி தீர்க்கும் தன்வந்திரி
 •   மேன்மை தரும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி
 • நலம்தரும் ஸ்ரீ நவ பைரவர்
 • சொர்ணம் அளிக்கும் ஸ்ரீ சொர்ண பைரவர்
 • தவப்பயன் தரும் ஸ்ரீ தத்தாத்ரேயர்
 • காலமெல்லாம் காக்கும் ஸ்ரீ கார்த்திகை குமரன்
 • சங்கடம் தீர்க்கும் ஸ்ரீ ராகு-கேது
 • வளம் தரும் ஸ்ரீ வாஸ்து பகவான்
 • முக்தி தரும் ஸ்ரீ முனீஸ்வரர்
 •  மனித நேய ஸ்ரீ மணிகன்டன்


பெண் தெய்வங்கள்
 • ஆரோக்யம் அருளும் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி
 •  அன்பின் வடிவம் ஸ்ரீ மரகதேஸ்வரி
 • வாக்கு அளிக்கும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவி
 • மரணபயம் நீக்கும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி
 • வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி
 •  அன்னமளிக்கும் ஸ்ரீ அன்னபூரணி
 • மங்களம் தரும் ஸ்ரீ மஹாமேரு
 • வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி
 • பயம் நீக்கும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
 •  நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள்
 • வன்மைகள் போக்கும் ஸ்ரீ வனதுர்கா (மூலிகை வனம்)
 • நன்மை தரும் ஸ்ரீ நவகன்னிகைகள்
 • அபயம் தரும் ஸ்ரீ அனுசுயா தேவி


குரு மகான்கள்
 • மனதைக் கவரும் ஸ்ரீ மகாவீரர்
 • வல்லமை தரும் ஸ்ரீ வள்ளலார்
 • ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (மகா பெரியவா)
 • ரணங்கள் போக்கும் ஸ்ரீ ராகவேந்திரர்
 • சூட்சுமமான ஸ்ரீ சூரியபாபா
 •  தங்கமான தங்க பாபா
 • கிரியா யோகி ஸ்ரீ மஹா அவதார் பாபா
 • மீனாட்சி மைந்தன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்
 • இரட்சித்து காக்கும் ஸ்ரீ பகவான் ரமணர்
 • வேதத்தின் நாதம் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
 • ஷேமங்கள் நல்கும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
 • குலம் காக்கும் ஸ்ரீ குருநானக்
 • புத்தி அருளும் ஸ்ரீ புத்தர்
 • அல்லல் போக்கும் ஸ்ரீ அத்ரி மகரிஷி
 • பித்ரு தோஷம் நீக்கும் ஸ்ரீ குருபாதம்


 • கவலைகள் போக்கிடும் காலச்சக்கரம்
 • நன்மை தரும் 27 நட்சத்திரங்கள்
 • 12 ராசிகள்
 • அதிர்ஷ்டம் அளிக்கும் அஷ்டதிக் பாலகர்கள்
 • பஞ்சம் போக்கும் பஞ்சபூதங்கள்
 • கவலை நீக்கும் காமதேனு (கோசாலா)

No comments:

Post a Comment