Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 21, 2023

Thai Amavasai Vasthra thanam, Anna thanam at Sri Danvantri Arogya Peedam

வாலாஜாபேட்டை 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 
தை அமாவாசை முன்னிட்டு நரிக்குறவர்களுக்கு 
வஸ்திர தானம், அன்னதானம் 
1000கிலோ மிளகாய் கொண்டு 
ப்ரத்யங்கிரா யாகமும் நடைபெற்றது.

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , தினந்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி  மாதாந்தோறும் அமாவாசையில் 
ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடைபெற்று வருவதும் வழக்கம் 

இந்த நிலையில் இன்று ஜனவரி 21ம்தேதி  சனிக்கிழமை  காலை  தை மாத அமாவாசை முன்னிட்டு சகலவிதமான சாப  தோஷங்கள், பித்ரு தோஷங்கள்  நீங்கிட வேண்டி  ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு (1000 கிலோ மிளகாய் வற்றல்) ஆயிரக்கணக்கான மிளகாய் தட்டுகளுடன் , சௌபாக்கிய பொருட்கள் , மூலிகைகள்   கொண்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள்  நடைபெற்றது.  

அதை தொடர்ந்து  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் , நரிக்குறவர் குடும்பத்தினருக்கு  வஸ்திர தானமும், அன்னதானமும் வழங்கி ஆசிர்வதித்தார். 

தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமிகளை  தரிசனம் செய்து அன்னபிரசாதமும், பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். 

நாளை 22ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 30ம்தேதி திங்கள் கிழமை  முடிய தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள ராஜயோகம் தரும் ராஜ மாதங்கிக்கு, சியாமளா நவராத்திரி முன்னிட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.  

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.










No comments:

Post a Comment