Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 28, 2023

Radhasapthami day- Aswamedha pooja at Sri Danvantri Arogya Peedam

 வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் ரதசப்தமி  முன்னிட்டு   7 குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை 

 வாலாஜாப்பேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பல்வேறு  சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருவது வழக்கம். 

அந்த வகையில்  27 நட்சத்திரக்காரர்கள்  நலன் கருதியும் , ராஜ யோகங்கள் கிடைக்க,  ஸ்திரி சாபம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, தொழில் வண்டி, வாகனம் கிடைத்திட,  அரசியல், அரசாங்கம், சினிமா, வர்த்தம் போன்றவற்றில் அதிக லாபம் பெற்றிட, எதிரிகள் தொல்லை அகல, போட்டி பந்தயங்களில் வெற்றி  பெற்றிட, காரியத்தடை அகன்று பல்வேறு  நன்மைகள் கிடைத்திட வேண்டி   தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 7குதிரைகள் வைத்து அஸ்வமேத பூஜை  நடைபெற்றது. 

இன்று 28ம்தேதி  சனிக்கிழமை ,  அஸ்வமேத பூஜையை  முன்னிட்டு 7 குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு  தன்வந்திரி பீடம் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்னர்  பீடாதிபதி  டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக  கணபதி  பூஜையுடன்  ஹோமமும்  நடைபெற்றது.

பின்னர் அலங்கரித்து அழைத்து வரப்பட்ட 7 குதிரைகளுக்கும் தனித்தனியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  குதிரைகளுக்கு  உணவு வழங்கப்பட்டது.  பின்னர் தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்களும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில்  குதிரைகளுக்கு மலர்கள் தூவி, பூஜை செய்து வழிபட்டு சென்றனர். 

பின்னர் சிறப்பு பூஜைகளுடன்  லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம்  தொடங்கி நடைபெற்றது. நாளை 29ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு அஸ்வாரூடா ஹோமம் மஹா பூர்ணாஹூதியும் பின்னர் ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.

அஸ்வமேத பூஜை மற்றும்  ஹோமங்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 










No comments:

Post a Comment