Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, July 15, 2018

Sri Varahi Homam.....


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

வளர்பிறை பஞ்சமியில்
வெற்றி தரும் வராஹி ஹோமம்.

நாடு வளம் பெற, நானிலம் செழிக்க நடைபெறுகிறது.


மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 17.07.2018 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் ஆஷாட நவராத்திரி மற்றும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு நாடு வளம் பெற, நானிலம் செழிக்க ஸ்ரீ வராஹி ஹோமம் நடைபெறுகிறது.

உலகிற்கே தாயாக விளங்குகின்ற ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் அங்குசத்தில் இருந்து தோன்றி ஸ்ரீ லலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத்தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரக்ஷிப்பவளாகவும் விளங்குகின்ற அன்னை ஸ்ரீ வராஹி பன்றி முகத்துடன் காட்சி தரும் இவள். திருமால், அம்பிகை மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுளரின் அம்சம் ஆவாள்.  எருமையை வாகனமாக கொண்டவள். தேவர்கள், அசூரர்கள் மற்றும் மனிதர்கள் இவர்களால் போற்றப்படுவளும் சப்த மாதாக்களில் ஐந்தாவதாக தோன்றியவளும், வராக மூர்த்தியின் தங்கையும், 64 யோகினிகளில் ஒருவளும், உன்மத்த பைரவரின் துணைவியும் ஆவாள் இவள்.

நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப வி்வசாதயத்தின் தெய்வம் இவளே.  கலப்பை இவளது ஆயுதமாகும். திருச்சி திருவானைக்காவல் நாயகி அகிலாண்டேஸ்வரி வாராகியின் வடிவமே. ரா ராசோழன் இவளை வழிபட்டே எக்காரியத்தை தொடங்கியதால் அனைத்திலும் வெற்றி பெற்றான் என்று வரலாறு தெரிவிக்கிறது.  தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராராசோழன்.

பக்தர்கள் அழைத்தால் ஓடோடி வரும் வராகியை நாம் அவசியம் வழிபட வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் வாராகிக்காக நடைபெறும் ஹோமத்திலும், வழிபாட்டிலும் கலந்து கொள்வதின் மூலம் நம் பாரத நாட்டினை எதிரிகளிடமிருந்து காக்க முடியும்.  நம் நாட்டினை விவசாயத்தில் முதலிடம் பிடிக்க செய்து உலகிற்கே உணவளிக்க முடியும்.

பெண் தெய்வம் ஆதலால் அம்பிகையின் அம்சம், வாராஹ முகம் கொண்டதனால் திருமாலின் அம்சம்,  மூன்று கண்களை கொண்டதனால் சிவபெருமானின் அம்சம் ஆவாள்.  எதையும் அடக்கும் வல்லமை உடையவள்.  சப்தமாதர்களில் மிகவும் வேறுபட்டவள்.  பலத்தில் மிருக பலம் கொண்டவள்.  குணத்தில் தேவகுணத்தை கொண்டவள்.  தன்னை அண்டிவயர்களின் துயரை போக்குபவள்.  ஊழிக்காலத்தில் உலகை பாதுகாத்த பெருமை இவளையே சாரும். மிகவும் துடிப்பானவள்.  மிகவும் வேகமானவள். கோபத்தில் உச்சம் இவளே.  அன்பு காட்டுவதிலும், ஆதரவு காட்டுவதிலும் இவளுக்கு நிகர் இவளே.  பராசக்தி வாராகியின் துணை கொண்டே 14 உலகங்களையும் வெற்றி கொண்டாள்.  பண்டாசூரனை பராசக்தி வதம் செய்ய துணை புரிந்தவள் இவளே.

ராசராச சோழனின் வெற்றி தெய்வமான இவள் எதிரிகளை அழிப்பவள்.  செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள்.  பயத்தினை போக்குபவள்.  வெற்றியைத் தருபவள்.  எல்லா நலன்களையும் தருபவள். ஆலயங்களுக்கு சென்று வாராகி தேவியை அனுதினமும் துதித்தால் எவ்வித துன்பமும் நேராது என்பது உண்மை. எல்லா செயல்களும் வெற்றியுடனே தான் முடியும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அன்னை வராஹியின் அருள் கிடைக்க வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஹோமத்தில் அனைவரும் பங்கேற்று நாடும், வீடும் நலம் பெற பிரார்த்திப்போம்.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment