Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 13, 2018

Nakshatra Homam.....


15.07.2018 ஞாயிற்றுக்கிழமை
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
நன்மை தரும் நக்ஷத்திர காயத்ரி ஹோமம்.

தற்கால இறை வழிபாட்டின் நிலை:

நாம் இறைவனை வழிபாடு செய்து இறையருளை பெற எத்தனையோ ஆகம கோட்பாடுகள், ஐதீகங்கள், பாரம்பர்ய முறைகள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று தினமும் ஆலயத்துக்கு சென்று இறைவனை பிரார்த்தனை செய்து அங்கே நடைபெறும் பூஜைகள், யாகங்கள் மற்றும் திருமஞ்சன வைபவங்களின் பங்கேற்று வருவது நமக்கு  பலவகையிலும் பலன் தரும். மேலும் காலை, மாலை இருவேளையும்  ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டால் முழுமையான இறையருள் இன்பத்தை பெற முடியும்.

யார் ஒருவர் தினசரி கோவிலுக்கு செல்கின்றனரோ, அவருக்கு ஆலயத்தில் உள்ள தெய்வீக அலை சக்தி நம்மில் நிரம்ப கிடைப்பதை அவரால் உணர முடியும். இதை மனதில் கொண்டே, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்றுஎன்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் இன்று நாம் எல்லாரும் தினமும் ஆலயத்துக்கு செல்கிறோமா என்றால், இல்லை எனபது தான் பதிலாக இருக்கும். நம்மில் அதிக சதவீதம் பேர் தினமும் காலை, மாலை ஆலயத்துக்கு செல்வதில்லை.

இந்துக்களில் பெரும் பாலானவர்கள் திருவிழாக்களில் மட்டுமே கோவில் பக்கம் வந்து செல்கிறார்கள். இப்படி வந்து இறைவனை தொழுவது நமக்கு எந்த நன்மையும் இல்லை என கூறலாம். தினமும் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது இந்துக்களின் முக்கிய பங்காகும். ஆனால் தற்போதைய இயந்திரமான வாழ்க்கையில் அனைவரும் ஒருநாள் செல்வதே மிகவும் கடினமாக உள்ளது. இந்த சூழலில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது ஆலயம் செல்ல முயற்சி செய்யலாம். ஆலயத்துக்கு செல்ல முடியாத ஒவ்வொரு தினமும் நமக்கு ஏற்பட்ட இழப்பு என்று தான் கருத வேண்டும்.

இழப்பை சரி செய்வது எப்படி?

அதற்கும் பல வழிகள் உள்ளன. அதில் முதன்மையானதாக கருதப்படுவது ஜென்ம நட்சத்திர வழிபாடாகும். இது நம் எல்லோராலும் மிக, மிக எளிதாக கடைபிடிக்கக் கூடியது. அதோடு மிகுந்த பலன் தரக்கூடியது.
இந்த வழிபாட்டுக்கு முதலில் ஒவ்வொரு வரும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம். ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அது தான் அவரது ஜென்ம நட்சத்திரமாகும். ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வதே ஜென்ம நட்சத்திரம்தான்.

ஒருவர் நல்ல நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அவர் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் அந்த நட்சத்திரத்துக்கு உண்டு. அதனால்தான் ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

ஒருவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யக்கூடாது:

திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல், எண்ணை குளியல், மருந்து சாப்பிடுவது, அறுவை சிகிச்சை செய்தல், தாம்பத்திய உறவு போன்றவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது.

ஒருவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யக்கூடியது :

மற்ற சுபகாரியங்கள் செய்ய வேண்டும். அதாவது குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, யாகங்கள், ஹோமங்கள், யாத்திரை செல்லுதல், அன்னதானம், தானதர்மம் செய்தல், பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல், முக்கியமாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜென்ம நக்ஷத்திரம் என்றால் என்ன:

ஒவ்வொரு மாதமும் உங்களது ஜென்ம நட்சத்திரம் தினம் எந்த தேதியில் வருகிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டு, அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று உங்கள் நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். அது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும். 27 நட்சத்திரங்களும் பெண் தேவதைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யும் போது, அந்த நட்சத்திரத்துக்குரிய பெண் தேவதை மனம் குளிர்ந்து உங்களுக்கு ஆற்றலை அள்ளி, அள்ளி தருவாள்.

ஆலய வழிபாட்டின் போது கருவறை மூலவர் முன் நிற்கும் போது ஒரு நிமிடம் நாம் மனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவோம். அந்த சமயத்தில் நமது ஜென்ம நட்சத்திரத்தையும் மனதில் நினைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு அவர்களது ஜென்ம நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அவர்கள் பெயர் ராசிக்குரிய நட்சத்திரத்தின் தேவதையை வழிபடலாம்.

தன்வந்திரி பீடத்தில் 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் :

இவற்றை மனதில் கொண்டு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 12.00 மணி வரை நடைபெறுகிறது.

27 நக்ஷத்திர காயத்ரி ஹோமபலன்:

உலக நலன் கருதி மக்கள் ஆதித்யனுடைய அருள் பெற்று நக்ஷத்திர தோஷங்கள் அகலவும், குடும்ப க்ஷேமத்திற்காகவும், உலகில் பிறந்த அனைத்து மக்களுக்காகவும், கண் திருஷ்டி விலகவும், தடைபடும் காரியங்களில் வெற்றி பெறவும், 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள் நடைபெற உள்ளது. ஜென்ம நட்சத்திரத்தின் பலன்கள் பெற நடைபெறும் இந்த யாகத்தில் பங்குபெற்று பலன் பெறலாம்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியம் :

அல்லது ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப அருகில் உள்ள ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான். எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விடாதீர்கள். குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது. ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும். நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது. 27 நக்ஷத்திரத்தில் பிறந்த மக்கள் ஜன்ம நக்ஷத்திரத்தின் மஹிமையை புரிந்து கொள்ளும் விதத்திலும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும், நக்ஷத்திரங்களின் மூலம் ஏற்படும் பூர்ண நல்பலன்களை பெறவும், அனைவரும் அனைத்தும் பெற்று ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற தன்வந்திரி பீடத்தில் வருகிற 15.07.2018 நடைபெறும் 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்களில் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மேற்கண்ட 27 நக்ஷத்திர காயத்ரீ ஹோமத்தில் பங்கேற்க விரும்பவர்கள் நக்ஷத்திர மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment