Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, January 7, 2018

சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமம்...

தன்வந்திரி பீடத்தில்
சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 07.01.2018 ஞாயிற்று கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமமும் கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குழந்தை பாக்யம் வேண்டியும் பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கும் எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை வெல்லவும், சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து நிவாரணம் கிடைக்கவும். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லவும் பக்தர்கள் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது.


நிறைவாக பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனுக்கு பால், தயிர், இள்நீர், தேன், பஞ்சாமிருதம், பன்னீர், சந்தனம், விபூதி, போன்ற பொருள்களுடன் அஷ்ட திரவ்விய அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனயும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment