Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, January 14, 2018

சனி சாந்தி ஹோமத்துடன் சனி தோஷ நிவர்த்தி பூஜை.

தன்வந்திரி பீடத்தில்சனி சாந்தி ஹோமத்துடன்
சனி தோஷ நிவர்த்தி பூஜை.


சனிசாந்தி ஹோமத்துடன், சனிதோஷ நிவர்த்திபூஜை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 03.02.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் சில தோஷங்கள் :
ஏழரை சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களும், குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம்,ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, பித்ரு தோஷம், திருமணத் தடை, புத்திர பாகியம் இன்மை போன்ற தோஷங்களும் இடமாற்றம், வீட்டில் பிள்ளைகள் சொல்பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகளிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

சனீஸ்வர பகவான்நீதிமான் :
சனீஸ்வர பகவானை பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை,தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமரவைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை,பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த,ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
சனி சாந்தி ஹோமம் சனிக் கிழமை, சனி ஹோரை, பௌர்ணமி மற்றும் அமாவசையில் செய்வது மிகவும் உத்தமம், சனீஸ்வரரால் துன்பங்கள் ஏற்படின் அதை தடுத்து நிறுத்தி நம்மை உடனடியாக காத்து அருளும் சக்தி கலியுகத்தில் காளிதேவி, ஆஞ்சநேயர், யமதர்மராஜர் மற்றும் விநாயகருக்கே அதிகம். ஆஞ்சநேயர் பூஜைக்கு உகுந்த நாளான சனிக் கிழமை சனிசாந்தி ஹோமம் செய்வது மிகவும் சிறப்பு என்பதால் வருகிற 03.02.2018 சனிக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் கலந்து கொண்டு, அவரின் பரிபூரண ஆசியை பெற்று ஆயுள் தோஷம் நீங்கி அனைத்து செயல்களிலும் வெற்றிபெற பிரார்த்திக்கின்றோம்.

வசதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்- ஹோமத்திற்கு தேவையான திரவியங்கள், வன்னி சமித்து மற்றும் நெய், நல்லெண்ணெய் கொடுத்து வழிபாடு செய்யலாம். மேலும், ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு வைத்த சனீஸ்வர ரக்ஷையுடன் பிரசாதங்கள் வழங்கப்படும்.

யாகத்தில் சேர்க்கவுள்ள விசேஷ திரவியங்கள் :
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் கொண்டு நடைபெற உள்ளது.

காலச்சக்கரத்தில் கலச தீர்த்தம் :
யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது.
குறிப்பு : பிரதி ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமைதோறும் தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment