Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, December 28, 2017

வைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும்

தன்வந்திரி பீடத்தில்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு

சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும் 

நடைபெறுகிறது
 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாளை 29.12.2017 வெள்ளிக் கிழமை சுக்லபட்ச ஏகாதசி ( வைகுண்ட ஏகாதசி ) என்பதால் தன்வந்திரி பீடத்தில் விடியற்காலை 5.00 மணியளவில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ தன்வந்திரி பகவான் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிய உள்ளார். இதனை தொடர்ந்து காலை 8.00 மணியளவில் அஷ்வாரூடா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்கி வருகிறோம். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.

இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.


கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், "எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்' என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment