Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, December 26, 2017

468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டை - ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்

தன்வந்திரி பீடத்தில்
 சிவலிங்க ரூபமாக உள்ள
 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும்
ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் புனித மாதமான மார்கழி மாதத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெறும் புனர்பிரதிஷ்டையை முன்னிட்டு ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.

ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் சிறப்பு :

சிவனின் அம்சம் ருத்ரன். யஜுர் வேதத்தில் ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த  பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம் என்பதாகும்.  ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஜபித்துகொண்டே சிவனுக்கு பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.

ஸ்ரீ ருத்ரம் – சமகம், வேத இலக்கியத்திலும் வைதீக பாரம்பரியத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. வித்யைகளில் மேலானது வேதங்கள். வேத மந்திரங்களிலேயே மேலானது ருத்ரஏகாதசி; ருத்ர மந்திரங்களிலேயே மேலானது பஞ்சாக்ஷரீ (நமசிவாய).
நமசிவாய என்ற மந்திரத்திலேயே சிவா என்ற இரண்டெழுத்து மேலானது. மரத்தின் வேரில் ஊற்றப்படும் நீரானது, எல்லாக் கிளைகளுக்கும் பரவி அம்மரத்தையே செழிக்கச் செய்வது போல், ருத்ர ஜபத்தின் மூலம் ஸ்ரீ ருத்ர தேவனை வழிபடும்போது அனைத்து தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இது அனைத்து பாவங்களிலிருந்து விடுவிக்கும் சிறந்த பிராயச்சித்த ஹோமமாகவும், மேலான விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் ஆன்மீக சாதனையாகவும் இருக்கிறது.


ருத்ர ஜபத்தால் எல்லாத் தேவதைகளுமே திருப்தியடைகிறார்கள் என்றும், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ர ஹோமம் நடைபெற்று 468 சித்தர்களுக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர்கள் அருள்பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment