Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 16, 2017

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
அக்டோபர் 17 ம் தேதி ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மாபெரும் தன்வந்திரி ஹோமமும் 108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசையுடனும் மந்திர ஜபத்துடன் தன்வந்திரி லேகியம் தயாரிக்கும் வைபவமும் சிறப்பு ஸஹச்ர நாம அர்ச்சனையும், சதுர்வேத பாராயணமும் நடைபெறவுள்ளது.

தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் சென்ற ஆண்டு முதல்
உலக ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறதுசிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார். நாளை 13வது ஆண்டாக தன்வந்திரி ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. நாளை மாலை பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்களைக் கொண்டு, தன்வந்திரி மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு இந்த லேகியம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் மருந்து தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்து தீபாவளியன்று பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் சில மணி நேரங்கள் காட்சி தருவார். இந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


No comments:

Post a Comment